உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன்: முக்கிய பிரச்னைகளில் முதல்வர் விஜய் மவுனம் காப்பது வருத்தமளிக்கிறது. மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர் பார்த்து ஓட்டு போட்டுள்ளனர். அந்த எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்ற வேண்டும். தே.ஜ., கூட்டணியில் இருந்து த.ம.மு.க., விலகுகிறது. கூட்டணியில் இருந்து விலகினாலும், கூட்டணி தலைவர்களுடனான நட்பு தொடரும். டவுட் தனபாலு: சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணி சார் பில், ராஜபாளையம் தொகுதியி ல் போட்டியிட்ட உங்க மனைவி பிரிசில்லா பாண்டியன், 'டிபாசிட்' தொகை கூட வாங்க முடியாம தோற்று போயிட்டாங்களே... உங்க மனைவியின் தோல்விக்கு தே.ஜ., கூட்டணி கட்சிகள் தான் காரணம்னு நினைச்சு இந்த முடிவுக்கு வந்துட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது! பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்: முதல்வர் நாற்காலி தான் மாறியுள்ளதே தவிர, ஹிந்து விரோத ஆட்சி இன்னும் மாறவில்லை. திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றுமாறு உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக முதல்வர் விஜய் அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம், அதன் ஹிந்து விரோத முகம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. டவுட் தனபாலு: இந்த விவகாரத்தில் கடந்த தி.மு.க., அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு, அவங்க கூட்டணியில் இருந்த கம்யூ.,க்கள், வி.சி.க.,வினர் எல்லாம், 'ஆமாம் சாமி' போட்டாங்க... அந்த, 'ஆமாம் சாமி' கட்சிகள் ஆதரவில் த.வெ.க., அரசு நடப்பதால், இந்த முடிவை எடுத்திருப்பாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது! காங்., தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி: தமிழகத்தில் 59 ஆண்டுகளுக்கு பின், காங்., பிரதிநிதிகள் இரண்டு பேர் அமைச்சர்களாக ஆட்சியில் பங்கெடுத்திருப்பது, கட்சிக்கு கிடைத்த பெரும் திருப்பம். ஆறு மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. முதன் முறையாக கூட்டணி ஆட்சியில் இருந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க உள்ளோம். டவுட் தனபாலு: கூட்டணியில் சேர்ந்ததுமே, உங்க கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியை விஜய் துாக்கி தந்திருக்காரு... உள்ளாட்சி தேர்தலிலும் கணிசமான இடங்களை தருவார்... மேயர், நகராட்சி தலைவர் பதவி களில் உங்க கட்சியினர் அமர்வதன் வாயிலாக, தமிழகத்தில் காங்., வளர்ச்சி பெறும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை