மேலும் செய்திகள்
மேயர் 'ரேஸ்'; விஜய் 'சஸ்பென்ஸ்'
02-Jun-2026
மக்களுக்கு சேவை செய்யவும், அவர்களின் நம்பிக்கையை பெறவும், 'மக்கள் சேவகன்' என்ற இயக்கத்தை துவக்கி உள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, கோஷ்டி பூசல் இன்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப் படுவர். டவுட் தனபாலு:
'மக்கள் சேவகன்' என்ற இயக்கத்தை இப்ப தான் துவங்கியிருக்கீங்க என்றால், இதுவரை மக்களுக்கு எந்த சேவையும் செய்யலையோ என்ற, 'டவுட்' வருதே... அதே நேரம், உள்ளாட்சி தேர்தலில் கோஷ்டிப்பூசல் இன்றி உங்க கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்துட்டா, அது உலகின் எட்டாவது அதிசயமா இருக்கும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை! ---பா.ஜ., தமிழக தொழில் வல்லுநர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் சுந்தர்ராமன்:
கவர்னர் உரையின்போது, இரு முறை தேசிய கீதம் இசைக்கப்பட்டதை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சித்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. 'தமிழ்த்தாய் வாழ்த்து ஏன் இரு முறை இசைக்கப்படவில்லை' என கேள்வி எழுப்பி, தேசிய கீதத்தின் மீதான மரியாதையை அரசியல் விவாதப் பொருளாக மாற்ற முயற்சிப்பது, தேவையற்ற சர்ச்சையை உருவாக்குவதாகும். டவுட் தனபாலு:
வாஸ்தவம் தான்... ஏதோ, எதிரி நாட்டு தேசிய கீதம் சட்டசபையில் இசைக்கப்பட்டது போல உதயநிதி பொங்குவது ஏன்...? த.வெ.க., அரசை விமர்சிக்க வேற எதுவும் கிடைக்காமல், இந்த மாதிரி சின்ன விஷயங்களை ஊதி பெரிதாக்கி, உதயநிதி அரசியல் லாபம் தேட பார்ப்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது! ---பத்திரிகை செய்தி:
அ.தி.மு.க.,வில் இருந்து எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நான்கு பேருக்கும் அவர்கள் தொகுதியில் மோசமான பெயரே உள்ளது. மீண்டும் அவர்களுக்கே, 'சீட்' கொடுத்தால், தோல்வி அடையக்கூடும் என்பதால், அவர்களுக்கு சீட் கொடுக்க முதல்வர் விஜய் தயாராக இல்லை. அதேநேரம், நம்பி வந்தோருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதால், ஏதேனும் வாரிய தலைவர் பதவி வழங்க முடிவு செய்துள்ளார். டவுட் தனபாலு:
அந்த நாலு பேரும், த.வெ.க.,வில் மீண்டும் எம்.எல்.ஏ.,க்களாகி, அமைச்சராகும் கனவில் மிதந்துட்டு இருந்தாங்களே... இப்ப, 'உள்ளதும் போச்சு'ன்னு புலம்புவாங்களே... 'அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை' என்ற பழமொழிக்கு சரியான உதாரணம் இந்த நாலு பேரும் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
02-Jun-2026