உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார்:

இடைத்தேர்தல் பிரசாரத்தில், முதல்வர் விஜய் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆபாசமாக பேசி இருக்கிறார். விரக்தியின் உச்சத்தில் உதயநிதி இருப்பதால், பகலிலேயே நிதானம் இல்லாமல் பேசுகிறார். அவரது பேச்சை, அவரது குடும்பத்தில் உள்ளவர்களிடம் போட்டு காட்ட முடியுமா? உதயநிதி கடைசி வரை கத்துக்குட்டி தான். அவரால், தி.மு.க.,வுக்கு எதிர்காலம் உண்டா என்று தி.மு.க.,வினர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

டவுட் தனபாலு:

தி.மு.க.,வின் எதிர்காலம் உதயநிதி தான் என்பதை அந்த கட்சியினர் எப்பவோ ஏத்துக்கிட்டாங்களே... தேசிய அளவில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் எந்த அளவுக்கு சொதப்புகிறாரோ, அதற்கு சற்றும் சளைக்காம தமிழக எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதியும் செயல்படுவது, 'டவுட்' இல்லாம தெரியுது! ------

காங்கிரசைச் சேர்ந்த, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்:

நம் நாட்டில் தேர்தல்கள், 100 சதவீதம் முறைகேடாக நடைபெறுகின்றன என்பதை உறுதியாக நம்புகிறேன். கடல் கொந்தளிப்பாக இருக்கும்போது அதில் நீந்துவது எனக்கு மிகவும் பிடிக்கும். கொந்தளிப்பும் ஒரு வகையான அமைதி என்பதை அது நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

டவுட் தனபாலு:

'சுனாமியிலயே ஸ்விம்மிங்கை போடுவேன்'னு நல்லா தான் பேசுறீங்க... நம்ம நாட்டில் தேர்தல்கள், 100 சதவீதம் முறைகேடா நடந்துச்சு என்றால், உங்க கட்சியின் ஆட்சி நடக்கும் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் நடந்த தேர்தல்களிலும் முறைகேடுகள் நடந்திருக்குமோ என்ற, 'டவுட்' வருதே! -----

அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி:

'ஒட்டுமொத்த அ.தி.மு.க.,வும் படிப்படியாக த.வெ.க.,விற்கு வந்து விடும்' என்கின்றனர்; அது கனவில் கூட நடக்காது. அ.தி.மு.க., தான் த.வெ.க.,வை வீழ்த்தும். த.வெ.க., ஆட்சியை காப்பாற்ற, எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கும் வெட்கக்கேடான செயலை முதல்வர் விஜய் செய்கிறார். த.வெ.க., தான் தீய சக்தி.

டவுட் தனபாலு:

முதல்வர் விஜய், தி.மு.க.,வை தானே தீயசக்தின்னு விமர்சிக்கிறார்... உங்களை அவர் கண்டுக்கவே இல்லையே... ஆனாலும், நீங்க முந்திக்கிட்டு பதிலடி தர்றீங்களே... 'தி.மு.க., - அ.தி.மு.க., இடையே ரகசிய உறவு இருக்கு'ன்னு, த.வெ.க.,வினர் சொல்றது உண்மை தானோ என்ற, 'டவுட்' தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

S.V.Srinivasan
செப் 30, 2026 11:07

உங்களுக்கு நீச்சல் தெரியுமா


பேசும் தமிழன்
செப் 30, 2026 11:02

கேரளா.... கர்நாடகா.... தெலுங்கானா... மாநிலங்களில் கான் கிராஸ் கட்சி எப்படி வெற்றி பெற்றது....


Palanisamy Sekar
செப் 30, 2026 08:08

பழனிச்சாமிக்கு திமுகவின் கள்ள உறவு என்பது திமுக ஆளும் கட்சியாக இருந்தபோது எவ்வளவோ பிரச்சினைகள் வந்த போதும் திமுகவை எதிர்த்து எந்த ஓர் போராட்டமும் நடத்தாமல் தேமேன்னு இருந்தபோதே தெரிந்துவிட்டது. அவர் முதல்வர் பதவிக்காக கட்சியின் தன்மானத்தை அடகுவைத்து திமுகவின் ஆதரவை நாடி நின்றார். அவரால்தான் அதிமுக என்கிற கட்சி கரைந்துபோய்க்கொண்டே இருக்கிறது. அவரை துரத்தியடிக்காமல் அதிமுகவை ஆண்டவனே வந்தாலும் காப்பாற்றவே முடியாது என்று சத்தியம் செய்து சொல்கின்றேன்