உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்செல்லுார் ராஜு: 'தி.மு.க., கூட்டணியில் உள்ள வி.சி., கட்சி தலைவர்திருமாவளவனுக்கு நெருக்கடிகொடுக்கப்படுகிறது' என, த.வெ.க.,தலைவர் விஜய் சொன்னது நுாற்றுக்கு நுாறு உண்மை; ஆதவ்அர்ஜுனாவும் இதையே பேசிஉள்ளார். ஆனால், மற்றவர்கள் ஏதாவது பேசுவர் என்பதற்காகதிருமாவளவன், தனக்கு நெருக்கடி இல்லை என, அடக்கிவாசிக்கிறார்.டவுட் தனபாலு: 'திருமாவளவனுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கு'ன்னு சொல்றீங்க...இதே, ஜெ.,வா இருந்திருந்தா, எதிர் முகாமில் ஏற்பட்டுள்ள கூட்டணி குழப்பத்தை தனக்கு சாதகமா மாற்றி, அ.தி.மு.க., அணியை வலுப்படுத்தியிருப்பார்... உங்க தலைமையிடம் அந்த சாமர்த்தியம் இல்லையோ என்ற, 'டவுட்' தான் வருது!தமிழக துணை முதல்வர் உதயநிதி: 'பிறப்பால் முதல்வராகமுடியாது' என, வி.சி., கட்சி துணை பொதுச்செயலர் ஆதவ்அர்ஜுனா கூறியுள்ளார். யாருங்கபிறப்பால் முதல்வராக இருக்கின்றனர்... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் முதல்வர் ஆகின்றனர். அந்த அறிவுகூட இல்லை அந்த ஆளுக்கு.டவுட் தனபாலு: பிறப்பால் யாரும் முதல்வராக முடியாது தான்... ஆனா, தன் வாரிசுகளுக்குபோட்டியாக உருவெடுத்த எம்.ஜி.ஆர்., வைகோ போன்ற தலைவர்களை வெளியேற்றி, தன் குடும்பத்தினர் தவிர மற்ற யாருக்கும் கனவில் கூட முதல்வர் ஆசை வந்துடக் கூடாது என்ற கருணாநிதி கால வரலாறுகளைதான், ஆதவ் அர்ஜுனா சுட்டிக்காட்டியிருக்கார் என்பதில், 'டவுட்'டே இல்லை!தி.மு.க., மகளிர் அணி செயலர்கனிமொழி: கடந்த மூன்றரை ஆண்டுகளாக, தமிழகத்தில் எத்தனையோ சிறப்புமிகு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுஉள்ளன. அதன் முழு பலனையும் மக்கள் அனுபவித்து வருகின்றனர். அப்படி இருக்கையில்,தி.மு.க., ஆட்சியில் செய்திருக்கும்சாதனைகளை மக்களிடம் எடுத்துச்சென்றாலே, 200 தொகுதிகளிலும்தி.மு.க., நிச்சயம் வெற்றி பெறும்.டவுட் தனபாலு: பழைய பென்ஷன் திட்டம் கிடைக்காத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஊதிய உயர்வு கிடைக்காத டாக்டர்கள், மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள்னுஇந்த ஆட்சியின், 'முழு பலனையும்' அனுபவிச்சிட்டு வர்றவங்க ஏராளமா இருக்காங்களே... இதுல, நீங்க யாரை சொல்றீங்க என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Anantharaman Srinivasan
டிச 10, 2024 20:46

பிறப்பால் மட்டும் யாரும் முதல்வராக முடியாது. பிறந்த இடத்தை வைத்து ஆகமுடியுமென்பதே உண்மை.


Anantharaman Srinivasan
டிச 10, 2024 20:41

எதிர் முகாமில் ஏற்படும் கூட்டணி குழப்பத்தை தனக்கு சாதகமா மாற்றி ஒவ்வொரு கட்சியும் அரசியல் செய்ய முயற்சிப்பதால் தான் இந்திய பாலிடிக்ஸ்சே குட்டிசுவராகி விட்டது.


Esakki esakki
டிச 10, 2024 11:29

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் அதில் மாற்று கருத்து இல்லை... ஆனா பாருங்க... உங்களை நீங்களே முதலைமைச்சரை தேர்ந்தெடுக்குறீங்களே.... அதையும் வாக்காளர்களே தேர்ந்தெடுக்குமாறு தேர்தல் ஆணையம் ஆவண செய்தால் தேர்தலுக்கு பின் மலை வியாபாராம் நடக்காது... ??????


Esakki esakki
டிச 10, 2024 11:26

ஐயா.... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான். அதில் மாற்று கருத்து இல்லை... ஆனால் முதலமைச்சர் யார்னு உங்களுக்குள்ளே நீங்களே முடிவு பண்றீங்களே. அதை தான் ஐயா சொல்றாக.... அதையும் வாக்களர்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் ஆவண செய்தால் நலம் அப்பொழுது தான் தேர்தல் முடிந்ததும் மலை வியாபாரம்லா இருக்காது ??????


D.Ambujavalli
டிச 10, 2024 06:25

அதே கருணாநிதி கூட வெகு சுதாரிப்பாக பட்டத்து மூத்த இளவரசனை ஓரங்கட்டியும், மாற்றுக் குடும்ப வாரிசான கனிமொழியை நாசுக்காக டில்லிக்கு ‘கடத்தியும்’ நாடகமாடி, மூத்தகுடி வாரிசுகளுக்குள்ளேயே பாரபட்சம் காட்டியவர்தானே எனவே பிறப்பால் மட்டுமே ஆள முடியாது, அதற்கும் மச்சம் முக்கியம்


Velusamy Dhanaraju
டிச 10, 2024 20:32

அருமையான பதிவு