உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: 'முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை,152 அடி வரை உயர்த்தலாம்' என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 10 ஆண்டுகளாகியும், முல்லை பெரியாறு அணை பகுதியில் ஆண்டு பராமரிப்பு பணிகளைக்கூட மேற்கொள்ள, கேரள அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. முல்லை பெரியாறுபிரச்னைக்கு தீர்வு காண முடியாதகாங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான உறவை, தி.மு.க.,முறித்துக் கொள்ள வேண்டும். டவுட் தனபாலு: நீங்க சொல்ற மாதிரியே, காங்., - கம்யூ., கட்களின்உறவை தி.மு.க., முறிச்சுக்கிட்டாலும், அந்த கட்சிகள் உங்களை தேடி வந்துடப் போகுதா... உங்க பழைய பார்ட்னர் பழனிசாமி பக்கம் போவாங்களேதவிர, உங்க பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!லோக்சபா பா.ஜ., - எம்.பி.,சம்பித் பத்ரா: எதிர்க்கட்சிகள் பார்லிமென்டை செயல்பட விடாமல் தடுப்பது வருத்தமளிக்கிறது. பிரதமர் மோடி, அதானி தோற்றத்தில் முகமூடி அணிந்து வருவது, அவர்களை ராகுல் வீடியோ பதிவு செய்வதுஎல்லாம் கேலிக்கூத்தான செயல்.ராகுலுக்கு எதிர்க்கட்சித் தலைவராகசெயல்பட தெரியவில்லை.டவுட் தனபாலு: ராகுலின் விளையாட்டுத் தனத்தை பார்த்து வெறுத்து போய் தானோ, என்னவோ, 'இண்டியா' கூட்டணியின்தலைமை பதவிக்கு மம்தா பானர்ஜியை, கூட்டணி கட்சித் தலைவர்கள் முன்னிறுத்துறாங்களோ என்ற, 'டவுட்' வருது!பத்திரிகை செய்தி: இஸ்ரேல்பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுமீது, பணக்கார தொழிலதிபருக்குசலுகை காட்டுவதற்காக, சிகரெட்மற்றும் ஷாம்பெய்ன் மதுபானங்கள்லஞ்சமாக பெற்றது, தன்னை பற்றிய சாதகமான செய்திகள் வெளியிடுவதற்காக ஊடக நிறுவனம் ஒன்றுக்கு விதிமுறைகளில் சலுகை அளித்ததுபோன்ற வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் விசாரணையில், நீதிமன்றத்தில்பெஞ்சமின் நெதன்யாகு ஆஜராகி,தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார்.டவுட் தனபாலு: எங்க ஊர் அரசியல்வாதிகள் என்றால் சிகரெட், மதுபான கம்பெனிகளையேலஞ்சமா வாங்கிடுவாங்க... அந்த வகையில, இஸ்ரேல் பிரதமர் லஞ்சம் வாங்குறதுல எல்.கே.ஜி.,யை கூட தாண்டலை என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
டிச 13, 2024 06:56

என்னது, ஷாம்பெயினும் மதுவும் லஞ்சமா, எங்க ஊரில் சும்மா ஒரு அலுவலக கீழ் நிலை ஊழியரிடம் வந்து ட்ரெயினிங் ஒரு ஆண்டாவது எடுத்துக்கொள்ளவேண்டும் இவர் சமர்த்தில்லாத பிள்ளையாக இருக்கிறாரே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை