உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக சட்டத்துறை அமைச்சர்ரகுபதி: அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில், எதிர்க்கட்சிகளின் செயலை தாங்க முடியாமல், உயர் நீதிமன்றமே அவர்கள் முகத்திரையைக் கிழித்து தொங்க விட்டுள்ளது. உயர் நீதிமன்றமே கண்டித்த பின்னும், அரசியல் சுயநலத்திற்காக, பாதிக்கப்பட்ட மாணவியின்எதிர்காலம் குறித்து கொஞ்சமும் கவலையின்றி நடந்து வருகிறார் பழனிசாமி.டவுட் தனபாலு: இதே உயர் நீதிமன்றம்தானே, கள்ளக்குறிச்சிகள்ளச்சாராய சம்பவத்துல சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது... அதை ஏத்துக்காம, உச்ச நீதிமன்றத்துல அப்பீல் பண்ணி, அங்கயும், 'குட்டு' வாங்கிட்டு, இப்ப ஐகோர்ட் உத்தரவைக் கொண்டாடுவது சரியா என்ற, 'டவுட்' வருதே!அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: பெண்களுக்கு எதிரான குற்றச் செய்திகள் வந்து கொண்டே இருப்பதுபற்றி, காவல் துறையை கையில்வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் மவுன சாமியாராக இருப்பது கண்டனத்திற்குரியது.பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில்ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.டவுட் தனபாலு: அண்ணா பல்கலை மாணவி விவகாரத்துலகைதான ஞானசேகரன், உங்க ஆட்சியிலும், 'கைவரிசை' காட்டியிருக்காரே... ஆள் கடத்தல்வழக்குல எல்லாம் சிக்கிஇருக்காரு... அப்பவே, அந்த வழக்குகளை துரிதமா நடத்தி, அவருக்கு தண்டனை வாங்கி தந்திருந்தா, இப்ப அண்ணா பல்கலை சம்பவம் நடந்திஇருக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:வேங்கைவயல் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள்; தஞ்சாவூர்அருகே சயனைடு கலந்த மதுவைக் குடித்து இருவர் இறந்த வழக்கில் ஒன்றரை ஆண்டுகள்; திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ஜெயகுமார் கொலை நடந்து ஒன்பது மாதங்கள் ஆகின்றன. இவற்றில், இதுவரை குற்றவாளிகளை பிடிக்கவில்லை. தமிழக காவல் துறை முற்றிலும்செயலிழந்து விட்டது.டவுட் தனபாலு: அரசுக்கு எதிராக, சமூக வலைதளங்கள்ல கருத்து பதிவிட்டா மட்டும், ராவோட ராவா கைது பண்ணிடுறாங்களே... இந்த வேகத்துல கால்வாசியை, மேற்கண்ட வழக்குகள்ல நம்ம போலீசார் காட்டிஇருந்தாலே, எப்பவோ குற்றவாளிகளை பிடிச்சிருக்கலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
ஜன 05, 2025 22:31

ஸ்காட்லாந்து க்கு இணையான தமிழகபோலீஸ் இந்த திராவிடர்கள் ஆட்சியில் stand என்றால் எழுந்து நிற்கும் Sit என்றால் அமர்ந்து கொள்ளும். பல் பிடுங்கின பாம்பு.


சமீபத்திய செய்தி