வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த Tom and Jerry விளையாட்டு எந்தக் கட்சிக்கும் புதிதில்லையே தேர்தல் நெருங்குகிறது, 'கேட்டதை- சீட் மட்டுமில்லை, நோட்டையும்தான் - கொடுக்கிறாயா, கட்சித் திசையை மாற்றட்டுமா' என்ற சமிஞைதான் இது என்பது உலகறிந்த ரகசியம் ஆயிற்றே
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்: கடந்த 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க.,விடம் வாங்கிய 25 கோடி ரூபாய் செலவாகி விட்ட தாலும், கம்யூனிஸ்ட் கட்சிகளை போராட விடாமல் தி.மு.க., அரசு தடுப்பதாலும், மார்க்சிஸ்ட் கம்யூ., முன்னாள் மாநில செய லர் பாலகிருஷ்ணன், அரசுக்கு எதிராக பொங்கி எழுந்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படி வழங்கிய முதல்வர்,தி.மு.க.,வின் கிளை கழகங்களுக்கும் ஊதிய உயர்வு கொடுக்க வேண்டும்.டவுட் தனபாலு: அதெல்லாம் தேர்தல் வரும்போது, இதை விட சிறப்பாகவே செய்வாங்க... சந்தடி சாக்குல, கம்யூ., இயக்கங்களை தி.மு.க.,வின் கிளை கழகங்கள்னு இறங்கி அடிக்கணுமா என்ற, 'டவுட்' வருதே!பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் பல மடங்கு தரம் குறைந்தவை. இதனால், இரண்டு ஆண்டுகளில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, மது குடித்தால் புற்றுநோய் உள்ளிட்ட 200 வகையான நோய்கள் ஏற்படும் என்ற வாசகத்தையும், எச்சரிக்கை படத்தையும், மது பாட்டில்களில் அச்சிடும் முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.டவுட் தனபாலு: நீங்க மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்தபோது தான், சிகரெட் பாக்கெட்டுகளில், புற்றுநோய் பாதிப்பு படத்தையும், எச்சரிக்கையையும் வெளியிட்டீங்க... அதனால, சிகரெட் விற்பனை குறைஞ்சிடுச்சா... அதே மாதிரி, மது பாட்டில்ல எச்சரிக்கை வாசகம் அச்சடிச்சாலும், அதை கிழிச்சு போட்டுட்டு குடிச்சிடுவாங்க.. குடிக்கிறவங்களா பார்த்து திருந்தா விட்டால், குடியை ஒழிக்க முடியாது என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை!ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு: 'போராட்டம் நடத்த அனுமதி கிடைப்பதில்லை' என, எந்த கண்ணோட்டத்தில் மா.கம்யூ., முன்னாள் மாநில செயலர் பாலகிருஷ்ணன் கூறினார் என தெரியவில்லை. நேற்று முன்தினம் வரை, தி.மு.க., ஆட்சியை புகழ்ந்தவர் பாலகிருஷ்ணன். அவருக்கான கோரிக்கை என்ன வென்று தெரிந்தால், அதற்கான பரிகாரம் தேடலாம்.டவுட் தனபாலு: 'உங்களது தேவை என்னவோ, அதை எங்களிடம் சொல்லுங்க... சத்தமில்லாம செஞ்சு தர்றோம்... அதை விட்டுட்டு, பொது வெளியில் அரசை விமர்சிக்காதீங்க' என்பதை இவ்வளவு பட்டவர்த்தனமா யாராலும் சொல்ல முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை!
இந்த Tom and Jerry விளையாட்டு எந்தக் கட்சிக்கும் புதிதில்லையே தேர்தல் நெருங்குகிறது, 'கேட்டதை- சீட் மட்டுமில்லை, நோட்டையும்தான் - கொடுக்கிறாயா, கட்சித் திசையை மாற்றட்டுமா' என்ற சமிஞைதான் இது என்பது உலகறிந்த ரகசியம் ஆயிற்றே