உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / குற்றங்களை தடுக்க சொந்த செலவில் கேமராக்களை பொருத்திய கிராமத்தினர்

குற்றங்களை தடுக்க சொந்த செலவில் கேமராக்களை பொருத்திய கிராமத்தினர்

திருச்சுழி : திருச்சுழி அருகே கிராமத்தில் குற்ற செயல்களை தடுக்க மக்கள் சொந்த செலவில் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்தியுள்ளனர்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பள்ளி மடம் ஊராட்சிக்கு உட்பட்டது காரேந்தல் கிராமம். திருச்சுழி நரிக்குடி பகுதிகளில் அடிக்கடி குற்றச் செயல்கள் நடந்து வருகிறது. குற்றவாளிகள் தப்பித்து உட்கடை கிராமங்களில் பதுங்கி வருகின்றனர். போலீசாருக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது.இந்நிலையில் காரேந்தல் ஊர் மக்கள் ஒன்றிணைந்து தங்கள் சொந்த செலவில், ரூ.2 லட்சம் நிதியில், ஊரில் முக்கிய பகுதிகள், நவீன வகை சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்தி உள்ளனர். இதன் மூலம் குற்றச் செயல்கள் புரியும் நபர்கள், தேவையற்ற பிரச்சனைகளில் ஈடுபடுவோர் ஆகியோரை துல்லியமாக கண்காணிக்க இந்த கேமராக்கள் உதவும். போலீசார்களுக்கும் உதவிகரமாக இருக்கும். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கவும், போலீசாருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஊர் முழுவதும் கேமராக்களை பொருத்தியுள்ளோம். மேலும் எங்கள் கிராமம் குற்றமில்லாத கிராமமாக இருக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம், என்று கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஆக 20, 2024 17:36

பாத்துங்க... திருட்டு திராவிடனுங்க கேமிராவை ஆட்டையப்போட்டு வித்து டாஸ்மாக் சரக்கு வாங்கி குடிச்சிடுவாங்க.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ