வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, நாச்சியார் கோவிலை சேர்ந்த விக்னேஷ்,43, சுவாமிநாதன் கலைக்கூடம் என்ற பெயரில் சுவாமி சிலைகள், பித்தளை குத்துவிளக்குகள், கோவில் மணிகள் போன்றவற்றை தயார் செய்கிறார்.இந்நிலையில், கடந்தாண்டு மலேஷியா நாட்டின் கிலாங்கில், சுப்பிர மணிய சுவாமி கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக வேல் வடிவமைக்க வேண்டும் என, கோவில் நிர்வாகம் சார்பில், முடிவு செய்யப்பட்டது.இதற்காக விக்னேஷிடம் கோவில் நிர்வாகத்தினர் வேல் செய்ய ஆர்டர் கொடுத்தனர். இதில், 15 அடி உயரத்தில், ஓம் மற்றும் மயில் உருவம் பொறித்த வெண்கலத்தாலான வேல் வடிவமைக்கப்பட்டு, அடுத்த மாதம் அந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.இது குறித்து விக்னேஷ் கூறியதாவது: இந்த வேல், 175 கிலோ எடையில் 15 அடி உயரத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், வெண்கலத்தில், 55 அடி உயரத்தில் ஆன குழாயுடன், இந்த 15 அடி உயரம் உள்ள வேலை இணைத்து, மொத்தம் 70 அடி உயரத்தில், பொருத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா