உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / கிறிஸ்தவ மதத்திலிருந்து விலகி மீண்டும் ஹிந்து மதத்தில் இணைந்த 21 பெண்கள்

கிறிஸ்தவ மதத்திலிருந்து விலகி மீண்டும் ஹிந்து மதத்தில் இணைந்த 21 பெண்கள்

திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றத்தில் கிறிஸ்துவ மதத்திலிருந்து 21 பெண்கள் மீண்டும் ஹிந்து மதத்தில் இணைந்த தாய் மதம் தழுவும் விழா நடந்தது. ஹிந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் 98வது பிறந்த தினத்தை முன்னிட்டு இவ்விழா நடந்தது. மதுரை அனுப்பானடியை சேர்ந்த 21 பெண்கள் கிறிஸ்தவ மதத்திலிருந்து விலகி மீண்டும் ஹிந்து மதத்தில் இணைந்தனர். அவர்கள் நேற்று சரவண பொய்கையில் நீராடி, ஆறுமுக நயினார் கோவிலில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, 'வெற்றிவேல் வீரவேல்' என முழக்கமிட்டு, ஹிந்து மதத்தில் இணைந்தனர். ஹிந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் அரசுப்பாண்டி கூறுகையில், ''பல்வேறு சலுகைகள் தருவதாக கூறி ஹிந்துக்களை மாற்று மதத்திற்கு அழைத்து செல்கின்றனர். ஆனால், எவ்வித சலுகையும் கிடைக்காமல் அவர்கள் அங்கு துன்பப்படுகின்றனர். இதனால் அவர்களாக விரும்பி மீண்டும் ஹிந்து மதத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

KNC SARAN
செப் 24, 2025 22:50

அவர்கள் எப்போது சாதியை விட்டு போனார்கள்? பொன்னுரங்கம் என்கிற சாத்ராக் தான் பெயர். அரசாங்க பதிவேட்டில் இந்து மதம்.


JEBARAJ
செப் 24, 2025 10:07

ஒரு முகத்திலாவது சந்தோசம் இருக்கா???


Training Coordinator
செப் 22, 2025 14:53

சரி. இப்படி திரும்பியவர்களுக்கு எந்த சாதி கொடுப்பது?


rathish waran
செப் 22, 2025 12:36

அருமை.


Kulandai kannan
செப் 21, 2025 20:37

சபாஷ்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
செப் 21, 2025 12:34

வெளிநாட்டு பணம் கணக்கு வழக்கில்லாமல் வந்த போது அதை கொடுப்பேன் இதை கொடுப்பேன் சொல்லி ஏமாற்றிய மதம் மாற்றிய கும்பலுக்கு தர இப்பொழுது பணம் இல்லை. காரணம் வெளிநாட்டு பணம் வருவது முற்றிலும் நிறுத்தப்பட்டது.. இப்பொழுது இருக்கும் கிருஸ்துவர்கள் கொடுக்கும் தசமபாகத்தை வைத்துக்கொண்டு பாதிரிகளுக்கு சம்பளமும் மிக சிறிய அளவில் மதமாற்ற மும் நடைபெறுகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் பணம் நிருத்த பட்டதால் கிருஸ்துவர்களுக்கு பாஜகவை கண்டால் காண்டு.....!!!


மண்ணாந்தை
செப் 20, 2025 21:56

எந்தப் பிரிவில் இருந்து வந்தார்கள்: கத்தோலிக், பிராட்டஸ்டன்ட்ஸ், பெந்தகோஸ்... ???


Venugopal S
செப் 20, 2025 17:21

அவர்கள் கொடுத்ததை விட இவர்கள் அதிகமாக கொடுத்தார்களோ?


c.mohanraj raj
செப் 20, 2025 15:50

வாருங்கள் தாய் மாமதம் காப்போம் வாழ்க வளமுடன்


anbu suresh
செப் 22, 2025 17:59

அப்படியே அவங்களா ஓதுவார்களாகவும் ஆக்குங்க


manu putthiran
செப் 20, 2025 14:51

நல்ல விஷயம்..வாழ்த்துக்கள்..


முக்கிய வீடியோ