உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / கரூரில் 3வது திருமணம்: கல்யாண ராணி கைது

கரூரில் 3வது திருமணம்: கல்யாண ராணி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்: கரூர் மாவட்டம், புஞ்சை காளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 30, கொசு வலை கம்பெனி ஊழியர். இவருக்கும், கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ரேணுகா, 36, என்ற பெண்ணுக்கும் கடந்த, 12ல், மண்மங்கலம் பெருமாள் கோவிலில் திருமணம் நடந்தது.இந்நிலையில், ரேணுகாவுக்கு ஏற்கனவே புதுக்கோட்டையை சேர்ந்த மெய்யர், கோவையை சேர்ந்த லோகநாதன் ஆகியோருடன், திருமணம் நடந்தது தெரிய வந்துள்ளது.இதுகுறித்து ரேணுகாவிடம், ரமேஷ் கேட்ட போது, ஆத்திரமடைந்த ரேணுகா, வரதட்சணை வழக்கு தொடர்வேன் என ரமேஷை மிரட்டியதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த ரமேஷ், கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார்.இதையறிந்த ரேணுகா, நேற்று முன்தினம் இரவு வெளியூருக்கு தப்பி செல்ல, கரூர் பஸ் ஸ்டாண்ட் சென்றார். அப்போது, கரூர் மகளிர் போலீசார், ரேணுகாவை கைது செய்தனர்.மேலும், ரமேஷ் - ரேணுகா திருமணத்துக்கு ஏற்பாடு செய்த, கோவையை சேர்ந்த புரோக்கர்கள் ஜெகநாதன், ரோஷினி, தேவக்கோட்டையை சேர்ந்த பழனிக்குமார் ஆகியோரை,மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

நிக்கோல்தாம்சன்
ஜன 10, 2025 05:22

ஒருகணம் அக்காவோ என்று நினைத்துவிட்டேன்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 29, 2024 19:05

சொர்ணாக்காவுக்கு இந்த வயசுல கல்யாணமா ??


நிக்கோல்தாம்சன்
ஜன 11, 2025 05:54

நீங்க வேற , இணைவன், துணைவன், மன்னவன் என்று தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி என்று போயிருக்காங்க


Vijay D Ratnam
டிச 28, 2024 15:14

சொம்பு செம்ம அடிவாங்கி இருக்கும் போல.


ashok kumar
டிச 26, 2024 15:11

பாரதி கண்ட புதுமை பெண்கள். மகளிர் காவல் நிலையம் மற்றும் அரசு வழங்கி உள்ள ஜீவனாம்சம் இருக்கும் வரை இந்த புதுமை பெண்கள் இருப்பார்கள். வருங்கால இந்தியா 99% பெண்கள் 1% ஆண்கள் இருப்பார்கள். அரசு வழங்கி உள்ள ஜீவனாம்சம் திட்டம் முழுமையடையும்


Ravi Shankar
டிச 26, 2024 10:43

பாவம் ........