உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  40 கி.மீ. அரை பெடலில் சைக்கிள் பயணம்

 40 கி.மீ. அரை பெடலில் சைக்கிள் பயணம்

மேட்டுப்பாளையம்: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் நிறைவு பகுதியாக, சாலை பாதுகாப்பை வலியுறுத்தி, மேட்டுப்பாளையம் அரசு பஸ் நடத்துனர் அறிவழகன், சைக்கிளின் முன் பகுதியில் 10 கிலோ மற்றும் பின் பகுதியில் 10 கிலோ அரிசி மூட்டைகளுடன், அரை பெடல் அடித்து விழிப்புணர்வு பயணம் சென்றார். மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முதல் கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை 40 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டினார். வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !