உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / ஒருவார காதலனுடன் டும்டும் ; 13 ஆண்டு புருஷனுக்கு கல்தா

ஒருவார காதலனுடன் டும்டும் ; 13 ஆண்டு புருஷனுக்கு கல்தா

நெலமங்களா : 'இன்ஸ்டாகிராம்' தளத்தில் ஒரு வாரத்துக்கு முன் அறிமுகமானவரை காதலித்து மணந்த பெண், 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த கணவர் மற்றும் மகனை உதறி தள்ளிவிட்டு சென்றார்.கர்நாடகாவின் பெங்களூரு ரூரல், ஜக்கசந்திராவில் வசிப்பவர் ரமேஷ், 40. இவரது மனைவி நேத்ராவதி, 35. இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். தம்பதி அன்யோன்யமாக இருந்தனர்.இந்நிலையில், 10 நாட்களுக்கு முன் நேத்ராவதிக்கு, 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகம் வாயிலாக சந்தோஷ் என்பவர் அறிமுகமானார். இந்த அறிமுகம், காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். இரண்டு நாட்களுக்கு முன் கணவரையும், மகனையும் தவிக்கவிட்டு நேத்ராவதி வீட்டை விட்டு வெளியேறினார்.கோவில் ஒன்றில் சந்தோஷை திருமணம் செய்து கொண்டார். தன் திருமண வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதைக் கண்டு கணவர் ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார். நெலமங்களா போலீஸ் நிலையத்துக்கு சென்ற நேத்ராவதி, கணவருடன் தனக்கு வாழ விருப்பம் இல்லை என்றும், சந்தோஷை திருமணம் செய்து கொண்டதையும் விவரித்தார்.மேலும், 'கணவர் வீட்டில் உள்ள துணிமணிகள், மற்ற பொருட்கள் வேண்டும். என் மீது முதல் கணவர் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தலாம் என்று பயமாக உள்ளது' எனக் கூறி, போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் ரமேஷின் வீட்டுக்கு வந்தார்.ஒரு வாரத்துக்கு முன் அறிமுகமான நபருக்காக, 13 ஆண்டுகள் வாழ்ந்த கணவரை துாக்கி எறிந்த நேத்ராவதியை, அக்கம் பக்கத்தினர் திட்டி, வசைபாடினர். அவற்றை பொருட்படுத்தாமல், நேத்ராவதி தன் பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

டண்டனக்கா
ஏப் 11, 2025 06:39

இந்தியா வல்லரசு ஆகுதோ இல்லையோ, இந்த விஷயதில் கூடிய சீக்கிரமே அமெரிக்காவையும் மிஞ்சி விடுவோம்.


மணி
ஏப் 11, 2025 02:45

சீக்கிரம் திரும்பி வருவாள் அப்ப அனுமதிக்காதே


anonymous
ஏப் 10, 2025 19:56

கலி இல்லை களவியுகம்.....


புதிய வீடியோ