பி.இ., படிக்கும் பெண் சித்தப்பாவுடன் திருமணம்
ஓமலுார்:சேலம் மாவட்டம் ஓமலுார், நாராயணன் நகரை சேர்ந்த 21 வயது பெண், பி.இ., படிக்கிறார். அதே பகுதியில் வசிக்கும், 21 வயது எலக்ட்ரீஷியனை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி, ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு, சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் அவர்களை, ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினர். அங்கு இருவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள், அந்த பெண்ணிடம், 'மணமகன் உனக்கு சித்தப்பா உறவு முறை. அவருடன் திருமணம் வேண்டாம்' என கூறினர். எனினும், அதை ஏற்க, அந்த பெண் தயாராக இல்லை. போலீசாரும் அறிவுரை கூறிய போது, அந்த காதல் திருமண தம்பதி ஏற்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த போலீசார், 'கலிகாலம்... எப்படியோ போங்க...' என, கூறி இருவரையும் அனுப்பி வைத்தனர்.