உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / இரு மாணவர்கள் மட்டுமே படிக்கும் அரசு துவக்கப்பள்ளி

இரு மாணவர்கள் மட்டுமே படிக்கும் அரசு துவக்கப்பள்ளி

திருவாடானை : திருவாடானை அருகே காட்டியனேந்தல் அரசு தொடக்கப்பள்ளியில் இரு மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்துகிறார். இம்மாணவர்களுக்கு காலை உணவு பிள்ளையாரேந்தல், மதிய உணவு குஞ்சங்குளம் பள்ளிகளில் இருந்து கொண்டு வந்து கொடுக்கப்படுகிறது.இங்குள்ள சமையல் கூடம் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.சில மாதங்களுக்கு முன் கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில், ஒரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றினர். இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பள்ளி மூடப்பட்டது. அங்கு படித்த மாணவர் அருகில் உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பள்ளியையும் அதிகாரிகள் மூடாமல், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

KRISHNAN R
ஏப் 01, 2025 10:13

இன்னும் பல உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு தேவை


முதல் தமிழன்
மார் 26, 2025 13:38

செலவுகளை கணக்கு பார்த்தால், பணமாக அவர்களிடம் கொடுத்து தனியார் பள்ளியில் படிக்க சொல்லலாம். ஏனென்றால் அங்கு உள்ள ஆசிரியர் வேலை சரி இருக்காது.


Bhaskaran
மார் 26, 2025 12:56

தண்டச்சம்பளம் வாங்கியிருக்காங்க அதிகாரிகளும் உடந்தை


अप्पावी
மார் 26, 2025 06:49

இன்னும் மும்மொழித் திட்டம் வந்து, அவிங்களுக்கு இந்தி, ஓரியா, பஞ்சாபி காஷ்மீரி ந்னு சொல்லிக்குடுக்க ஆசிரியர்கள் வரப்போறாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை