வாசகர்கள் கருத்துகள் ( 1 )
100 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழரை மணந்து தமிழராக ஆன பர்மிய பெண்களைப் பற்றிய செய்திகள் எங்கே?
மேலும் செய்திகள்
தைவான் பெண்ணை கரம் பிடித்த காரைக்குடி இளைஞர்
17-Nov-2024
பெரம்பலுார்: பர்மா என முன்னர் அழைக்கப்பட்ட- மியான்மர் நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணை, பெரம்பலுார் மாவட்ட வாலிபர், ஹிந்து முறைப்படி நேற்று திருமணம் செய்து கொண்டார்.பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் தாலுகா இரசுலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்- - செல்வகுமாரி தம்பதியின் மகன் மதிவதனன், 33. டிப்ளமா சிவில் இன்ஜினியரான இவர், சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் சூபர்வைசராக பணியாற்றி வருகிறார்.அதே நிறுவனத்தில் பணியாற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்த எய்எய்மோ, 33, என்பவருடன் மதிவதனனுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் ஏழு ஆண்டுகளாக காதலித்தனர்.இருவரும் இந்தியா சென்று, ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து, பங்கேற்க அழைத்தனர். இதற்காக, இருவரும் சிங்கப்பூரில் இருந்து பெரம்பலுார் மாவட்டம், இரசுலாபுரம் கிராமத்திற்கு கடந்த 17ம் தேதி வந்தனர்.இவர்களுக்கு, அரியலுார் முருகன் திருமண மண்டபத்தில் நேற்று காலை 10:30 மணிக்கு ஹிந்து முறைப்படி திருமணம் நடந்தது. உற்றார், உறவினர்கள் முன்னிலையில் மணமகள் எய் எய்மோ-வின் கழுத்தில் மணமகன் மதிவதனன் தாலி கட்டினார்.மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு விமான டிக்கெட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், திருமணத்தில் பங்கேற்கவில்லை.
100 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழரை மணந்து தமிழராக ஆன பர்மிய பெண்களைப் பற்றிய செய்திகள் எங்கே?
17-Nov-2024