மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
03-Oct-2025 | 1
மஹாராஷ்டிரா அரசு பள்ளிக்கு உலகின் சிறந்த பள்ளிக்கான விருது
02-Oct-2025 | 1
வக்கீலாக தடம் பதித்த முதல் பழங்குடியின பெண்
25-Sep-2025 | 1
சென்னை:எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர் ஒருவர், சென்னையில் அவருக்கு கோவில் கட்டியுள்ளார். அக்கோவிலின் கும்பாபிஷேகம், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடக்க உள்ளது.சென்னை, புதுப்பேட்டையை சேர்ந்தவர் கலைவாணன், 50; வாரப் பத்திரிகையின் முகவராகவும், விற்பனையாளராகவும் பணிபுரிகிறார். சிறுவயது முதலே, எம்.ஜி.ஆர்., மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அது நாளடைவில் பக்தியானது.பக்தியை வெளிப்படுத்தும் வகையில், சொந்த செலவில், எம்.ஜி.ஆர்., படம் போட்ட சாவிக்கொத்து, பிளாஸ்டிக் ஸ்டிக்கர் போன்றவற்றை, பார்ப்பவர்களிடம் கொடுத்து வருகிறார். எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்ட முடிவு செய்தார்.மனைவியின் நகையை விற்ற பணம், சேமிப்பு என தேறிய மூன்று லட்சம் ரூபாயை கொண்டு, திருநின்றவூர், நத்தம்மேட்டில், முக்கால் கிரவுண்டு இடம் வாங்கி, அதில் எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டினார். அக்கோவிலினுள் முன் மண்டபத்தில், ஆறடி உயரத்தில் எம்.ஜி.ஆரின் பளிங்கு சிலை வைத்துள்ளார். அதற்கு முன்பாக, அபிஷேகத்திற்காக, இரண்டு அடி உயரத்தில் கிரானைட் கல்லால் ஆன உற்சவர் சிலையையும் அமைத்துள்ளார்.இக்கோவிலின் கும்பாபிஷேகம், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடக்கிறது. 'அருள்மிகு எம்.ஜி.ஆர்., ஆலயம், நத்தமேடு, செல்லியம்மன் சாலை, திருநின்றவூர்' என, முகவரி வெளியிடப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
03-Oct-2025 | 1
02-Oct-2025 | 1
25-Sep-2025 | 1