உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  ரயில்வே ஸ்டேஷனில் கரடி

 ரயில்வே ஸ்டேஷனில் கரடி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம், பாபநாசம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கடையம் பகுதியில் கடந்த சில நாட்களில் 3 கரடிகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன. இந்நிலையில் அம்பாசமுத்திரம் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று முன்தினம் அதிகாலை கரடி சுற்றித்திரிந்தது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து கரடியை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அம்பாசமுத்திரம் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் வனத்துறையிடம் மனு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ