வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சிறுவனுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள்
பந்தலுார்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஒரே நாளில், 100 மரக்கன்றுகள் நடவு செய்த சிறுவனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பந்தலுார் அருகே எருமாடு பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவரின் மகன், ரக்க்ஷித்ரிகான்,3, நேற்று ஒரே நாளில், 100 மரக்கன்றுகள் நடவு செய்தார். இதனை கப்பலா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர்கள் ஜனார்த்தனன், சவுந்தரபாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து, கையுன்னி துாய இருதய மெட்ரிக் பள்ளியில் முதல்வர் பாதர் ஜெய்சன் தாமஸ் தலைமையிலும்; எருமாடு பூங்காவில், ஸ்ரேயாஸ் சமுதாய ஒருங்கிணைப்பாளர் அருள் மேரி, தேவதாஸ் ஆகியோர் தலைமையிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. விஞ்ஞானி அசோக்குமார் கூறுகையில், ''சமுதாயத்தில் அனைவரும் இயற்கையை பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும். இளம் வயதில் ஏற்கனவே 1,000 மரக்கன்றுகள் நடவு செய்து சாதனையாளர் விருது பெற்ற இந்த சிறுவன், தற்போது ஒரே நாளில், 100 மரக்கன்றுகள் நடவு செய்தது பாராட்டுக்குரியது,'' என்றார்.
சிறுவனுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள்