உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ

 உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ

பீஜிங்: சீனாவில் இரண்டாவது ஆண்டாக நடக்கும் மனித உருவ ரோபோகளுக்கான உலக விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் 100 மீ., ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா நாட்டு வீரர் உசைன் போல்ட்டின் உலக சாதனையை ரோபோ ஒன்று முறியடித்தது. நம் அண்டை நாடான சீனாவின் தலைநகர் பீஜிங்கில், மனித உருவ ரோபோக்களுக்கான சர்வதேச விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. ஐந்து நாட்கள் நடக்கும் இந்த போட்டியில், இந்த ஆண்டு மிக அதிகமாக, 2,056 மனித உருவ ரோபோக்கள், 666 அணிகள் பங்கேற்றுள்ளன. தடகளம், டேபிள் டென்னிஸ், கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன. இதன் மூலம், எதிர்காலத்தில் ரோபோக்கள் எந்தெந்த துறைகளில் அதிகளவில் பயன்படுத்தப்படலாம் என்பதற்கான ஒரு முன்னோட்டம் கிடைக்கிறது. போட்டியின் தொடக்க விழாவில், 100க்கும் மேற்பட்ட மனித உருவ ரோபோக்கள் மைதானத்தில் அணிவகுத்தன. அதை தொடர்ந்து நடந்த, 100 மீ., ஓட்டப் பந்தயத்தில், பீஜிங்கைச் சேர்ந்த, 'எக்ஸ் -ஹியூமனாய்டு' என்ற நிறுவனம் தயாரித்த ரோபோ, பந்தய துாரத்தை, 9.39 வினாடிகளில் கடந்தது. இது, கரீபிய தீவு நாடான ஜமைக்காவைச் சேர்ந்த வீரர் உசைன் போல்ட், 2009ல் படைத்த, 9.58 வினாடிகள் என்ற உலக சாதனையை விட குறைவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

kulanthai kannan
ஆக 24, 2026 10:17

எந்த ரோபோவாலும் ஊழல் வேகத்தில் திராவிட மாடலை ஜெயிக்க முடியாது


Robert Kannane
ஆக 24, 2026 09:04

இது ஒரு செய்தியா? மனிதனால் உறுவாக்கியது இயந்திரம். இயந்திரத்தின் ஸ்பிடு மோட்டை அதிகரித்தால் அது அந்த வேகத்திற்கு ஓடும். இதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை


மேலும் செய்திகள்