வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பஸ் ஊழியர்கள் ஒண்ணும் பரோபகாரிகள் அல்ல. குடிச்சிட்டு பஸ்ல ஏறும்போதே தடுத்திருக்கணும். பஸ்ச நிறுத்தி லேட் ஆச்சுன்னா பஸ்ல இருக்கிறவங்க கத்துவாங்க.
கோவை: நெஞ்சு வலி ஏற்பட்ட பயணியை நடுவழியில் இறக்கி விட்ட கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கோவை வடவள்ளியை சேர்ந்தவர், 40 வயது நபர் கடந்த, 15ம் தேதி அரசு பஸ்ஸில்(தடம் எண் 1சி) பயணம் செய்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. பஸ்ஸினுள் மயக்கமடைந்து விழுந்துள்ளார். இந்நிலையில், இவரை கண்டக்டர் ஆர்.எஸ்.புரத்தில் ரோடு ஓரமாக இறக்கி படுக்க வைத்து விட்டு அங்கிருந்து சென்றார். அப்பகுதியில் இருந்தவர்கள் அந்நபரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நெஞ்சுவலி ஏற்பட்ட நபரை பாதி வழியில் இறக்கி விடப்பட்டது குறித்து கோவை கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டார். இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, கண்டக்டர் சரவணன், நெஞ்சு வலி ஏற்பட்ட நபர் மது அருந்தியிருந்ததாகவும், அதனால், அவரை இறக்கி விட்டதாகவும் தெரிவித்தார். மருத்துவமனையில் விசாரித்த போது பயணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கண்டக்டர் சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். டிரைவர் ஈசனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
பஸ் ஊழியர்கள் ஒண்ணும் பரோபகாரிகள் அல்ல. குடிச்சிட்டு பஸ்ல ஏறும்போதே தடுத்திருக்கணும். பஸ்ச நிறுத்தி லேட் ஆச்சுன்னா பஸ்ல இருக்கிறவங்க கத்துவாங்க.