உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  ஹெல்மெட் அணியாத ஏட்டுவை ஜி.ஹெச்.,சுக்கு அனுப்பிய டி.ஐ.ஜி.,

 ஹெல்மெட் அணியாத ஏட்டுவை ஜி.ஹெச்.,சுக்கு அனுப்பிய டி.ஐ.ஜி.,

திருநெல்வேலி: ஹெல்மெட் அணியாத போலீஸ் ஏட்டுவை, ஜி.ஹெச்.,சுக்கு அனுப்பிய டி.ஐ.ஜி.,யின் செய ல் பாராட்டு பெற்று வருகிறது. திருநெல்வேலி போலீஸ் ஸ்டேஷனில், ஏட்டாக பணியாற்றுபவர் வெங்கடேஷ், 50. இவர், ஹெல்மெட் அணியாமல் டூ - வீலரில் சென்றதை கவனித்த டி.ஐ.ஜி., திருநாவுக்கரசு, அவரிடம் இதுகுறித்து விசாரித்தார். அதன்பின், ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி, அரசு மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெறுபவர்களை பார்த்துவிட்டு வருமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்ற வெங்கடேஷ், விபத்தில் சிக்கியவர்களின் நிலையை நேரில் பார்த்து, மனம் கலங்கினார். 'இனி தவறாமல் ஹெல்மெட் அணிவேன்' என வீடியோ வெளியிட்டதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்திய டி.ஐ.ஜி., திருநாவுக்கரசுவுக்கு நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில், பாராட்டு பெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sivaraman visvanathan
ஜூலை 01, 2026 07:55

இது தெரியாமல்தான் இத்தனை நாள் வேலையில் இருந்தாரா ? தலைமை அதிகாரி பார்க்கவில்லை என்றால் அப்படியே இருந்து விடுவாரா? மனம் கலங்கினாராம் அதிகாரிக்கு பாராட்டாம்


Anantharaman Srinivasan
ஜூலை 01, 2026 00:35

50 வயசு ஏட்டுக்கு இதுவரை ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டவர்களின் seriousness பற்றித்தெரியாதா..?


NALAM VIRUMBI
ஜூன் 30, 2026 21:01

அருமை. அபராதம் விதிப்பதை விட நல்லதொரு படிப்பினையை கற்றுக் கொடுத்த டி ஐ ஜி பாராட்டப்பட வேண்டியவர் தான். இச்செயல் அவருக்கு மட்டுமல்லாது ஹெல்மெட் அணியாமல் செல்லும் அனைவருக்கும் அதன் அவசியத்தை உணர்த்தும்.


Gajageswari
ஜூன் 30, 2026 18:36

ஹெல்மெட் முக்கியம் அல்ல. சாலையில் வாகனங்கள் நிறுத்துவது, அதிக வேகம், இருபுறமும் விளக்குகள்.


Krishna
ஜூன் 30, 2026 07:13

Why Not Punished-Levied Fine?????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை