உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  சுவாசத்தை எளிதாக்கும் கருவி; கண்டுபிடித்த டாக்டருக்கு விருது

 சுவாசத்தை எளிதாக்கும் கருவி; கண்டுபிடித்த டாக்டருக்கு விருது

புதுக்கோட்டை: நோயாளிக்கு சுவாசத்தை எளிதாக்கும் 'பெரிஸ்' எனும் கருவியை கண்டுபிடித்த அரசு டாக்டருக்கு, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் விருது வழங்கப்பட்டது. புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவர் டாக்டர் பெரியசாமி, எட்டு புதிய கருவிகளை கண்டுபிடித்து, அவற்றை மருத்துவ மாநாட்டில் வெளியிட்டு மூன்று முறை சிறந்த ஆராய்ச்சிக்கான விருதை பெற்றுள்ளார். தற்போது, பெரிஸ் மூச்சுக்குழாய் கருவியை கண்டுபிடித்து காரைக்குடியில் நடந்த இந்திய மருத்துவ சங்க மாநாட்டில் வெளியிட்டார். சங்கம் சார்பில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. டாக்டர் பெரியசாமி கூறியதாவது: பெரிஸ் மூச்சு குழாய் கருவியானது, அறுவை சிகிச்சையின் போதும் மயக்கநிலையில் உள்ளவர்களுக்கும், சுய நினைவு இல்லாமல் மூச்சு அடைப்பு ஏற்பட்டவர்களுக்கும் அடைப்பை நீக்கி, தொடர்ந்து பிராண வாயுவை செலுத்தும்.

எவ்வித பிடிமானம் இல்லாமல், தானாகவே தொடர்ந்து ஆக்ஸிஜன் செல்வதை உறுதிசெய்து, மூளை பாதிப்பு இல்லாமலும் இதயம் தொடர்ந்து இயங்கவும், சீரான சுவாசத்திற்கும், மயக்கநிலையில் இருந்து எவ்வித பின்விளைவுகள் இன்றி இயல்பு நிலைக்கு வர உதவுகிறது. இக்கருவியானது, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கவும், கரியமிலவாயு தடையின்றி வெளியேறி இயல்பு நிலையில் தொடரவும் செய்வதால், மயக்கநிலையில் இருந்து சுயநினைவுக்கு திரும்ப உதவுகிறது. இது எல்லோரும் பயன்படுத்தும் எளிய உயிர்காக்கும் கருவி. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
டிச 15, 2025 07:18

இந்த சுவாசத்தை எளிதாக்கும் கருவியைக் கண்டுபிடித்த டாக்டருக்கு பாராட்டுக்கள். இதன் விலை என்ன?இது மருத்துவமனையில் மட்டும்தான் உபயோகிக்க முடியுமா? வேறு இருதய நோயாளிகள் இதை வாங்கி வீட்டிலும் பயன்படுத்த முடியுமா?


சமீபத்திய செய்தி