உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / கல்வி கடுகு அளவு... முயற்சித்தது மலை அளவு! ஆண்டிற்கு ரூ.10 லட்சம் சம்பாதிக்கும் விவசாயி

கல்வி கடுகு அளவு... முயற்சித்தது மலை அளவு! ஆண்டிற்கு ரூ.10 லட்சம் சம்பாதிக்கும் விவசாயி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கற்றது கைமண் அளவு... கல்லாதது உலகளவு... என்று பழமொழி ஒன்று. அதற்கு ஏற்றார்போல கல்வி குறைவாக கற்றவர்களுக்கு, படித்தவர்களை விட அதிக விஷயங்கள் தெரியும். குறைந்த கல்வி கற்ற விவசாயி ஒருவர் விவசாயத்தில் சாதித்து வருகிறார்.வட கர்நாடகாவின் ஹூப்பள்ளி அருகே தோஸ்கூரை சேர்ந்தவர் மகந்தேஷ் பட்டணஷெட்டி. ஒருங்கிணைந்த விவசாயத்தில் வெற்றி கண்டு, முற்போக்கு விவசாயியாக மாறி உள்ளார்.தனது விவசாய பயணம் குறித்து, மகந்தேஷ் கூறியதாவது:நான் 6 ம் வகுப்பு வரை படித்து உள்ளேன். அதற்கு மேல் படிப்பு வரவில்லை. எனது தந்தை பட்டணஷெட்டியுடன் சேர்ந்து 13 வயதில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். அவரிடம் இருந்து விவசாயம் செய்ய கற்று கொண்டேன். ஒருங்கிணைந்த விவசாயம் செய்வது எனது ஆசை. சொந்தமாக 5 ஏக்கரில் நிலம் வாங்கினேன். அதில் மூன்று ஏக்கரில் கரும்பு பயிரிட்டேன். மீதம் இரண்டு ஏக்கர் நிலத்தில் தக்காளி, மிளகு, புதினா, கத்தரிக்காய் நடவு செய்தேன். பூச்சிகொல்லி மருந்துகளை காய்கறிகளை மீது தெளிக்காமல், காய்கறிகளை நல்ல முறையில் விளைவிக்க வேண்டும் என்பதை சவாலாக எடுத்து கொண்டேன்.மாடுகளின் சாணத்தை நன்கு காய வைத்து, உரமாக பயன்படுத்துகிறேன். பருவத்திற்கு ஏற்ப காய்கறிகளை பயிரிடுகிறேன். சொட்டு நீர்பாசன முறையில் விவசாயம் மேற்கொள்கிறேன். எனது தோட்டத்தில் விளைவித்த காய்கறிகளை ஹூப்பள்ளி, தார்வாட், பெலகாவி சந்தைகளில் விற்பனை செய்து வருகிறேன். இயற்கையான முறையில் விளைவிப்பதால் எனது காய்கறிகளுக்கு சந்தையில் டிமாண்ட் அதிகம். எனக்கு மனைவி ஸ்ரீதேவி முழு ஆதரவு அளிக்கிறார். ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய், விவசாயம் மூலம் கிடைக்கிறது. வாழ்க்கை வாழ்வதற்கு கல்வி முக்கியம் தான். ஆனால் படிக்காதவர்களும் விவசாயத்தில் சாதிக்கலாம் என்பது எனது கருத்து. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Gopalan
டிச 15, 2024 20:06

படிப்பு என்பது வேலைக்கு உதவ வேண்டும். ஆகவேதான் இவர் ஓரளவு ஸ்கூல் சென்றும் படித்து தந்தை அனுபவத்தை அறிந்து வாழ்க்கையில் முன்னேற மற்றவர்கள் வியக்கும் வகையில் இருக்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை