இன்ஸ்டா விளம்பரத்தால் ரூ.30,000 இழந்த விவசாயி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
திருநெல்வேலி: மானூரை சேர்ந்த விவசாயி, இன்ஸ்டாகிராமில் பழைய, 5 ரூபாய் நோட்டுக்கு, ரூ.10 லட்சம் கிடைக்கும் என வந்த விளம்பரத்தை நம்பி, 30,000 ரூபாய் அனுப்பி ஏமாற்றமடைந்தார். விவசாயி வீட்டில் இருந்தபோது அலைபேசியில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் பழைய 5 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என விளம்பர அறிவிப்பு வந்தது. பணத்தை பெறுவதற்கு வரி மற்றும் நுழைவு கட்டணமாக ரூ.30,000 செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதை 10ம் வகுப்பு பயிலும் தனது மகனிடம் விவசாயி காட்டினார். அவரும் அது உண்மையாக இருக்கும் என கூறினார். இதையடுத்து விவசாயி அறிவிப்பில் வந்த அலைபே சி எண்ணுக்கு தன் சேமிப்பு, ரூ.30,000 ஐ அனுப்பினார். அதன் பின் அந்த மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விவசாயி, மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.