உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / வட மாநில தொழிலாளர்களிடம் ஹிந்தி மொழியில் மத பிரசாரம்; ஹிந்து முன்னணி புகார்

வட மாநில தொழிலாளர்களிடம் ஹிந்தி மொழியில் மத பிரசாரம்; ஹிந்து முன்னணி புகார்

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியில் கட்டப்பட்டு வரும் அனல் மின் நிலையத்திலும், குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதள கட்டுமான பணியிலும், 2,000க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆங்காங்கே குடியிருப்புகளில் தங்கியுள்ளனர். இந்நிலையில், அவர்களிடம் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெத்தேல் அவுட் ரீச் மிஷன் என்ற கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்தவர்கள் ஹிந்தியில் அச்சிடப்பட்ட பைபிள், துண்டு பிரசுரங்களை வழங்கி உள்ளனர். மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபடும் அந்த அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து முன்னணி அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். ஹிந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில், திருச்செந்துார் தபால் அலுவலகத்தின் மூலம் முதல்வர், மத்திய உள்துறை அமைச்சருக்கு நேற்று புகார் மனு அனுப்பப்பட்டது. அத்துடன், ஹிந்தியில் அச்சிடப்பட்ட பைபிள், துண்டு பிரசுரங்களையும் இணைத்து மனுவாக அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

AMMAN EARTH MOVERS
ஆக 07, 2025 09:20

இந்த இந்து முன்னணியரும் மத போதனைகளை அச்சடித்து பிரச்சாரம் செய்யலாமே அதை விட்டு விட்டு மற்றவர்களை ஏன் குறை சொல்ல வேண்டும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 07, 2025 06:37

விலைபோகாத பொருளுக்குதானே விளம்பரம் தேவை >>>>