உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / கெத்து... விபத்து! பைக்கில் பறந்து சிறுவர்கள் 11 பெற்றோர் மீது வழக்கு

கெத்து... விபத்து! பைக்கில் பறந்து சிறுவர்கள் 11 பெற்றோர் மீது வழக்கு

கோவை; கோவை மாநகர பகுதிகளில், 18 வயது நிறைவடையாத சிறுவர்கள், ஆர்வம் காரணமாக அதிவேகமாக வாகனம் இயக்கி, எட்டு மாதங்களில் 11 விபத்து ஏற்படுத்தியுள்ளனர். 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவன் விபத்து ஏற் படுத்தினால், மோட்டார் வாகன சட்டத்தின்படி , பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு சிறைத்தண்டனை அல்லது ரூ.25 ஆயிரம் அபராதம் உண்டு என்பதை பெற்றோர் உணர வேண்டும். மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 199 (ஏ)ன் கீழ், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், சிறுவனின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது வாகன உரிமையாளருக்கு, மூன்று மாத சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கலாம். வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு, 25 வயது வரை ஓட்டுனர் உரிமம் பெற முடியாது. ரேஸ்கோர்ஸ், சரவணம்பட்டி, ஆத்துப்பாலம், பீளமேடு, ஹோப்ஸ் காலேஜ், சிட்ரா, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்கள் பலர், பைக்குகளில் அசுர வேகத்தில் செல்வதால், பிற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைகின்றனர். அரைகுறை யாக ஓட்டி பழகி விட்டு, வாகன நெருக்கடி மிகுந்த சாலையில் இவர்கள் 'பறப்பதால்' விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் சிறார்களை விட, ஏதுமறியாத பொதுமக்கள்தான் மோசமான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கோவை மாநகர பகுதிகளில், எட்டு மாதங்களில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களால், 11 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ஏழு பேர் காயம் அடைந்துள்ளனர். 11 வாகன ஓட்டுனர்களின் பெற்றோர் மீது, வழக்கு பதிந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. பக்குவம் அடையாத வயதில், தங்கள் பிள்ளைகள் பைக் ஓட்டுவதை ரசிக்கும் பெற்றோர், இனியாவது திருந்த வேண்டும் என் கின்றனர் போலீசார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

KRISHNAN R
செப் 14, 2025 18:34

வண்டி பறிமுதல் மற்றும் பெற்றோர் லைசென்ஸ் ... நிரந்தர நீக்கம் தேவை


நிக்கோல்தாம்சன்
செப் 11, 2025 19:13

அந்த பெற்றோர் மீது கேஸ் போடுவதற்கு முன்னரே பைசல் பண்ணினால் பத்தாயிரத்தோடு முடிச்சுடுவீங்க அப்படித்தானே


Ram
செப் 11, 2025 16:14

அவர்களின் பெற்றோர்களை வழக்கு முடியுன்வரை சிறையில் அடைக்கவேண்டும்


sasidharan
செப் 11, 2025 11:37

என்னதான் கண்காணிப்பு இருந்தாலும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனகளில் அதிவேகத்தில்தான் செல்கின்றனர். இவர்களால் மற்றவர்களுக்கு பிரச்சனை என்பதை உணர வேண்டும். காவல்துறை இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்


Premanathan S
செப் 11, 2025 10:16

இவர்கள் மட்டுமே விபத்துக்களில் இறக்க இறைவா ஏற்பாடு செய் சக சாலை பயனாளிகள் உயிரோடிக்க இது அவசியம் என் ஆண்டவரே