வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சபாஷ். பாராட்டுகள். பழங்குடியினர் பாதுகாக்கப்பட்ட வேண்டும். அங்கு மதமாற்றம் நடைபெறாமல் தடுக்கனும்.
வாழ்த்துகள்
மேலும் செய்திகள்
பழங்குடியின மக்களுக்கு குறைதீர்க்கும் முகாம்
12-Jul-2026
வால்பாறை: பள்ளி படிப்பை தொடர முடியாமல் தவித்த பழங்குடியின மாணவர்களை, பள்ளியில் சேர்ந்த சிங்கப்பெண் அதிரடிப்படையினர். வால்பாறை அடுத்துள்ள, காடம்பாறை செல்லும் வழியில் உள்ளது கீழ்பூனாஞ்சி செட்டில்மென்ட். இங்கு புலையர் இனத்தை சேர்ந்த, பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை எஸ்.ஐ., ரெஜினாபானு தலைமையிலான போலீசார், பழங்குடியின மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, அங்கு தந்தையை இழந்த இரண்டு குழந்தைகள், படிப்பை தொடர முடியாமல் கடந்த ஓராண்டாக வீட்டிலேயே இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து படிப்பை தொடர முடியாமல் தவித்த நாகம்மாள்,13, முருகன்,11, ஆகியோருக்கு ஆடை மற்றும் நோட்டு புத்தகங்களை வாங்கி கொடுத்து, வால்பாறை பழங்குடியின மாணவர் உண்டு உறைவிடப்பள்ளியில் சேர்த்தனர். பள்ளியில், சிறுவனை ஐந்தாம் வகுப்பிலும், சிறுமியை எட்டாம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர். சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசாரின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர்.
சபாஷ். பாராட்டுகள். பழங்குடியினர் பாதுகாக்கப்பட்ட வேண்டும். அங்கு மதமாற்றம் நடைபெறாமல் தடுக்கனும்.
வாழ்த்துகள்
12-Jul-2026