உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / வரவேற்புக்கு ஆன்லைனில் தோன்றிய புதுமண தம்பதி

வரவேற்புக்கு ஆன்லைனில் தோன்றிய புதுமண தம்பதி

பெங்களூரு: கர்நாடக மாநிலம், ஹூபள்ளியைச் சேர்ந்தவர் மேதா ஷிர்சாகர். இவருக்கும் ஒடிசாவின் புவனேஸ்வரைச் சேர்ந்த சங்மா தாஸ் என்பவருக்கு நவம்பர் 23ல் புவனேஸ்வரில் திருமணம் நடந்தது. இருவரும் பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். அவர்களின் திருமண வரவேற்பு மணப்பெண்ணின் சொந்த ஊரான ஹூபள்ளியில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க அவர்கள் புவனேஸ்வரில் இருந்து பெங்களூருவுக்கு விமான டிக்கெட் பதிவு செய்திருந்தனர். தொடர்ந்து தாமதமாகிய விமானம், இறுதியில் ரத்தானதால் மணமக்கள் இருவரும் ஆன்லைன் வீடியோ அழைப்பு மூலம் மண்டபத்தில் உள்ள திரையில் தோன்றி உறவினர்களின் வாழ்த்துகளை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை