உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / உப்புமா இனி இல்லை: மாணவர்கள் மகிழ்ச்சி

உப்புமா இனி இல்லை: மாணவர்கள் மகிழ்ச்சி

சென்னை: சமூக நீதி மாணவர் விடுதிகளில், உணவு பட்டியலில் இருந்து, உப்புமா நீக்கப்பட்டது, மாணவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுதும், சமூக நீதித்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். அவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. அதில் உப்புமா உட்பட சில வகை உணவை, மாணவர்கள் உண்ண விரும்பவில்லை. அதற்கு பதிலாக வேறு வகை உணவுகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று, உணவு பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.புதிய பட்டியலில், ரவா உப்புமா மற்றும் கிச்சடி நீக்கப்பட்டுள்ளது. இது, மாணவர்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதிய பட்டியலில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உணவின் அளவும் வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Dum
அக் 24, 2026 19:50

மக்களை சிறு வயதிலிருந்தே சோற்று பட்டாளமாக மாற்றும் ஒரு செயல். முதலில் ஓசி. பின் ஓசியாக வழங்கும் உணவின் சுவை பிடிக்கவில்லை. கர்மம் கர்மம். தமிழ்நாடு என்ன பாபம் செய்ததோ தெரியவில்லை .