உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / சிறையில் சரக்கு அடித்து டான்ஸ் ஆடிய கைதிகள்

சிறையில் சரக்கு அடித்து டான்ஸ் ஆடிய கைதிகள்

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள சிறையில், மது அருந்திவிட்டு கைதிகள் குத்தாட்டம் போடும் வீடியோ பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவின், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா, பெலகாவி சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளுக்கு, சொகுசு வசதிகள் கிடைப்பதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுவது வழக்கம். கைதிகள் சொகுசாக இருக்கும் வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பயங்கர வாதி ஜுகாத் சகீல் மன்னா உள்ளிட்ட சில கைதிகள், சிறைக்குள் மொபைல்போன் பயன்படுத்தும் வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, சிறையில் இருக்கும் கைதிகள் சிலர், மது அருந்திவிட்டு குத்தாட்டம் போடும் வீடியோ நேற்று வெளியானது. இதுவும் பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்தது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், அது உறுதி செய்யப்படவில்லை. வீடியோவில், கைதி ஒருவர் கன்னடத்தில் பேசுகிறார். இந்த வீடியோவில் இருப்பது பரப்பன அக்ரஹாராவா அல்லது மாநிலத்தில் உள்ள வேறு சிறையா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
நவ 10, 2025 11:01

பெங்களூரில் சிறையில் சரக்கு அடித்து கும்மாளம் போடுவார்கள். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபை கூட்டத்தொடரின்போது மக்கள் தேர்வுசெய்த எம்எல்ஏ -க்கள், சட்டசபை என்றும் பாராமல், ஒரு பக்கம் விவாதம் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் அவர்கள் தங்கள் மொபைல் போனில் பலான பலான படங்களை பார்த்தார்கள். அது தெரியுமா உங்களுக்கு? முதல்வர், துணை முதல்வர், மற்றும் அமைச்சர்கள் ஒழுங்காக இருந்தால், மற்றதெல்லாம் சரியாக நடக்கும். அங்கே முதலுக்கே மோசம்.


V RAMASWAMY
நவ 10, 2025 07:35

காவல் துறை அவலங்கள் அம்பலமாகின்றன.


நிக்கோல்தாம்சன்
நவ 10, 2025 07:06

காசு கொடுத்தா போதும்


Senthoora
நவ 10, 2025 06:06

இதெல்லாம் கர்நாடகாவில் சகஜம், சசிகலா ஜெயிலில் இருந்து ஷாப்பிங் போனாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை