சொக்கத்தங்கம் பத்மாவிற்கு ரஜினி வாழ்த்து
சென்னை: திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பத்மா; துாய்மை பணியாளர். கடந்த மாதம் 11ம் தேதி சாலையில் கிடந்த 45 சவரன் நகைகளை கண்டெடுத்து, உரிமையாளரிடம் கொடுப்பதற்காக போலீசில் ஒப்படைத்தார்.முன்னுதாரணமான அவரது நேர்மையை, பலரும் பாராட்டி வரும் நிலையில், நடிகர் ரஜினி போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் அழைத்து, தங்க செயின் வழங்கி பாராட்டினார். பத்மாவின் கணவர் ஆட்டோ ஓட்டுநர் சுப்ரமணி உடன் இருந்தார் .