உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / ரூ.29 கோடி ஜி.எஸ்.டி., நிலுவை; கூலி தொழிலாளிக்கு நோட்டீஸ்

ரூ.29 கோடி ஜி.எஸ்.டி., நிலுவை; கூலி தொழிலாளிக்கு நோட்டீஸ்

திருப்பத்துார்: வாணியம்பாடியில், 29 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., செலுத்த நோட்டீஸ் வந்ததால், கூலி தொழிலாளி இக்பால், 43, அதிர்ச்சி யடைந்தார். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி கரிமாபாத்தை சேர்ந்தவர் இக்பால் முஸம்மில். தனியார் தோல் தொழிற்சாலை கூலித்தொழிலாளி. இவருக்கு மார்ச் மாதம், கிருஷ்ணகிரி ஜி.எஸ்.டி., அலுவலகத்திலிருந்து, இக்பால் டிரேடர்ஸ் என்ற நிறுவனத்திற்கான, 6 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., நிலுவை செலுத்த வேண்டும் என, நோட்டீஸ் வந்தது. தொடர்ந்து வங்கி கணக்கும் முடக்கப்பட்டது. இக்பால் முஸம்பில், திருப்பத்துார் எஸ்.பி., அலுவலகத்தில் மார்ச், 16ல் புகார் அளித்தார். போலீசார் பெற மறுத்து, ஆன்லைனில் புகாரை பதிவு செய்ய அறிவுறுத்தினர். இக்பால் முஸம்பில், படிப்பறிவில்லாதவர் என்பதால், ஆன்லைனில் புகார் செய்யவில்லை. இந்நிலையில், நேற்று மீண்டும் அவருக்கு, கிருஷ்ணகிரி ஜி.எஸ்.டி., அலுவலகத்திலிருந்து, 'ஜி.எஸ்.டி., பாக்கி, 29 கோடி ரூபாய் உள்ளது. உடனடியாக செலுத்த வேண்டும்' என, நோட்டீஸ் வந்தது. அதிர்ச்சியடைந்த அவர், நேற்று எஸ்.பி., அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
அக் 28, 2026 06:51

கணக்கில் ஒரு 19 ரூவா இருக்கு. முடக்கி வசூல் பண்ணிருவாங்க. அவரோட குடிசை வீடு 300 கோடி பெறுமாம்.


அப்பாவி
அக் 28, 2026 06:49

பலே.. கூலித் தொழிலாளி கூட கோடிக்கணக்கில் வரி கட்டுறாரு. வல்லரசாயிட்டோம்.


புதிய வீடியோ