உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / சேலத்தை கலக்கும் குளுகுளு ஆட்டோ

சேலத்தை கலக்கும் குளுகுளு ஆட்டோ

சேலம்: கோடை வெயில் கொளுத்தும் நிலையில், 76 வயது ஆட்டோ டிரைவர், தன் ஆட்டோவை, 'குளுகுளு'வென மாற்றி, வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்.இதுகுறித்து, சேலம், சேகோசர்வ் பின்புறம், தெய்வானை நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுப்பிரமணி, 76, கூறியதாவது:நான், 60 வயது வரை தையல் தொழில் செய்தேன். 15 ஆண்டுகளாக தான் சொந்தமாக ஆட்டோ ஓட்டுகிறேன். 10 ஆண்டுகளுக்கு முன் கோடையில் ஆட்டோ ஒட்ட சிரமப்பட்டேன். வீட்டில் கறவை மாடுகள் வளர்க்கிறேன். ஒருநாள் அதற்கு தேவையான சோளத்தட்டு கட்டுகளை ஆட்டோ கூரையில் வைத்து கட்டி வந்தபோது வெயில் தெரியவில்லை.அடுத்த நாளே, 10 கட்டு சோளத்தட்டுகளை, ஆட்டோ மேற்கூரையில் பரப்பி கட்டி ஓட்டினேன். வாடிக்கையாளர்களும், 'வெயிலே தெரியவில்லை. நல்ல முயற்சி' என, ஊக்கம் அளித்தனர்.இதனால் ஆண்டுதோறும் கோடையில் ஆட்டோ மேற்கூரையில் சோளத்தட்டுகளை பரப்பி, 'குளுகுளு' ஆட்டோவாக மாற்றி ஓட்டி வருகிறேன். இரு ஆண்டுகளாக சோளத்தட்டுகள் மீது தண்ணீர் விழ, இரும்பு குழாயில் துளைகளை போட்டு தண்ணீர் சொட்டும்படி செய்துள்ளேன்.தட்டுகளில் இருந்து வழியும் நீர் குழாய்களில் சேமிக்கப்பட்டு மோட்டார் மூலம் மேலேற்றி, மீண்டும் பயன்படுத்தும்படி செய்துள்ளேன். தவிர, 10 லிட்டர் கேனில் குடிநீர் வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் மட்டுமன்றி தேவைப்படுவோர் பிடித்து குடிக்கலாம். இருக்கையில் பேன், மொபைல் போன் சார்ஜ் செய்ய, 'பிளக் பாயின்ட்' உள்ளிட்ட வசதிகள் ஆட்டோவில் உள்ளன. இக்கால இளைஞர்கள், வாடிக்கையாளர்களை கவர, இதுபோன்ற வசதிகள் தேவைப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ