வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இதில், ஒருவரின் தலை ஏற்கனவே வழுக்கையாக இருந்ததை பார்த்தும்......
உ.பி காரனுக்கு வெளியே முடியில்லை. உள்ளே மூளையில்லை.
மீரட்: உத்தர பிரதேசத்தில், வழுக்கை தலையில் முடி வளர வைப்பதாக கூறி எண்ணெய் விற்று மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.உத்தர பிரதேசத்தின் மீரட்டில் உள்ள சமர் காலனி - லிசாரி கேட் பகுதியில் தற்காலிக முகாம் அமைத்த மூன்று பேர், பல மூலிகைப் பொருட்களை கடந்த சில நாட்களாக விற்று வந்தனர். அங்கு, வழுக்கை தலையில் முடி வளர வைப்பதாக கூறி எண்ணெயும் விற்கப்பட்டது. முகாமின் உள்ளே சென்று பார்க்க, பொதுமக்களிடம் 20 ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதேபோல், முடி வளர்ப்பதற்கான எண்ணெய், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. முடி வளரும் என்பதை நம்பி ஏராளமானோர் அந்த எண்ணெயை வாங்கிச் சென்றனர். ஆனால், எண்ணெய் உபயோகித்த பலருக்கு, அடுத்த சில நாட்களிலேயே தலையில் அரிப்பும், ஒவ்வாமை காரணமாக காயமும் ஏற்பட்டது. இதையடுத்து, போலி எண்ணெய் குறித்து லிசாரி கேட் பகுதியைச் சேர்ந்த ஷதாப் என்பவர் போலீசில் புகாரளித்தார்.விசாரணையில், வழுக்கை தலையில் முடி வளரும் என கூறி போலி எண்ணெய் விற்ற இம்ரான், சல்மான், சமீர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில், ஒருவரின் தலை ஏற்கனவே வழுக்கையாக இருந்ததை பார்த்தும், உண்மை நிலை தெரியாமல் பொதுமக்கள் ஏமாந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.கைது செய்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மீரட் உட்பட உத்தர பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில், இதுபோல் முகாம் அமைத்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.டில்லி, ஹரியானா, உத்தரகண்ட் உட்பட பல்வேறு பகுதிகளில் மோசடி செய்து லட்சக்கணக்கில் அவர்கள் சம்பாதித்ததும் தெரியவந்துள்ளது. இதில், வேறு சில ருக்கும் தொடர்பு இருப்பதால், அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதில், ஒருவரின் தலை ஏற்கனவே வழுக்கையாக இருந்ததை பார்த்தும்......
உ.பி காரனுக்கு வெளியே முடியில்லை. உள்ளே மூளையில்லை.