உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / 5 ஓட்டுகளை பெற 6 மணி நேரம் பயணம்

5 ஓட்டுகளை பெற 6 மணி நேரம் பயணம்

தேனி: தேனி மாவட்டம் வெள்ளிமலை மலைப்பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் 5 ஓட்டுகளை பதிவு செய்ய தேர்தல் அலுவலர்கள் 6 மணிநேரம் பயணித்தனர். ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட வெள்ளிமலையில் உள்ள அரசு உதவி பெறும் துரைசாமி மரகதம் தொடக்கப் பள்ளியில் ஓட்டுச்சாவடி அமைந்துள்ளது. ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் இந்த ஓட்டுச்சாவடி உள்ளது. இங்கு 3 ஆண்கள், இரு பெண்கள் என மொத்தம் 5 வாக்காளர்கள் உள்ளனர். தேனியில் இருந்து 90 கி.மீ., துாரத்தில் உள்ள இந்த பகுதிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் 5 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், மண்டல அலுவலர், துணை மண்டல அலுவலர், 3 போலீசார் என 10 பேர் சென்றனர். அவர்கள் கூறியதாவது: ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு 'ஜீப்'பில் காலை 11:30 மணிக்கு புறப்பட்டோம். கரடுமுரடான மலைப்பாதையில் 6 மணிநேரம் பயணித்து ஓட்டுச்சாவடிக்கு மாலை 5:30 மணிக்கு வந்தோம். 5 வாக்காளர்களும் தங்கள் ஓட்டினை பதிவு செய்தாலும் மாலை 6:00 மணி வரை ஓட்டுச்சாவடியில் இருக்க அறிவுறுத்தி உள்ளனர். வரும் வழியில் சில காட்டு விலங்குகளை பார்த்தோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Arul Narayanan
ஏப் 23, 2026 11:34

அந்த ஐந்து பேரையும் ஒரு வாகனத்தில் ஏற்றி வேறு ஓட்டு சாவடியில் ஓட்டளிக்க ஏற்பாடு செய்து இருக்கலாம். அளவற்ற மனித உழைப்பையும் நேரத்தையும் வேறு விதமாக உபயோக படுத்தி இருக்கலாம்.


A P
ஏப் 23, 2026 09:12

வரும் வழியில் சில காட்டு மிருகங்களைக் கண்டோம் என்று இவர்கள் கூறுவது வெட்கம்கெட்ட, சூடு சொரணை அற்ற , திருட்டு அரசியல் வாதிகளைத்தான் இருக்கும். இந்தத் தேர்தல், திருட்டு அரசியல் வாதிகளை ஓரங்கட்டி, ஒழுக்கமானவர்கள் நாட்டை ஆள தேர்ந்தெடுக்க வேண்டுமென இறைவனை பிரார்த்திப்போம்,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை