உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / திரிஷாவுக்கு நற்பணி மன்றம்; மதுரையை கலக்கும் போஸ்டர்

திரிஷாவுக்கு நற்பணி மன்றம்; மதுரையை கலக்கும் போஸ்டர்

மதுரை: 'த.வெ.க.,வில் இணைந்து கட்சிப்பணியாற்ற வேண்டும்' என, நடிகை திரிஷாவிற்கு மறைமுகமாக அழைப்புவிடுக்கும் வகையில், மதுரையில் திரிஷா நற்பணி மன்றம் துவக்கப்பட்டுள்ளது . முதல்வராக விஜய் பதவியேற்ற விழாவில், நடிகை திரிஷா பங்கேற்றார். நடிகர் அஜித் தாய் இறந்ததற்கு விஜய் உடன் சென்று, அஞ்சலி செலுத்தினார். தவிர, சில நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்ற பழைய வீடியோக்கள், சமூக வலைதளங்களில் 'டிரெண்டிங்' ஆக்கப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில், திரிஷாவிற்கு விஜய் ஆதரவாளர்கள், நற்பணி மன்றத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் நகர் முழுதும் ஒட்டிய போஸ்டரில், திரிஷாவுடன் த.வெ.க.,வின் கொள்கை தலைவர்களுள் ஒருவரான வீரமங்கை வேலுநாச்சியார் படத்தையும் வைத்துள்ளனர். போஸ்டரில், 'அன்பு அக்கா திரிஷாவிற்கு எனவும், தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம்' என பதிவெண்ணையும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 'எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண், எங்கள் மதுரை என்றும், மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால்' என்றும் தெரிவித்துள்ளனர். திரிஷா, த.வெ.க.,வில் அதிகாரப்பூர்வமாக இணைந்து கட்சி பணியாற்ற வேண்டும் என போஸ்ட ர் மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

c.mohanraj raj
ஆக 04, 2026 08:56

சும்மாவா


Vasan
ஆக 04, 2026 05:54

புரட்சித்தலைவி மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் அவர்கள், புரட்சித்தலைவர் மாண்புமிகு எம்.ஜீ.ஆர் ஐயா அவர்கள் தலைமையில், கொ.ப.செ. கொள்கை பரப்பு செயலாளராக பணியாற்றி, அ.தி.மு.க வை பலப்படுத்தினார்.


sankaranarayanan
ஆக 04, 2026 05:12

இது என்ன போகிற போக்கைப்பார்த்தால் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போலவே இருக்கிறதே நல்லது தொடரட்டும் மேன்மேல் விரிவாகாட்டும் நற்பணி மன்றங்கள் எண்திக்கும் பரவட்டும்


Mani . V
ஆக 04, 2026 04:56

அறுபது, எழுபது வயது கோபாலபுரம் வாழ்நாள் கொத்தடிமைகள் சேர்ந்து இன்பநிதி பாசறை என்று ஆரம்பித்தால் அது தவறே இல்லை. தெலுங்கு தனுஷை தமிழினத் தலைவன் என்று சொல்லி கட்சி ஆரம்பித்தால் அது தவறே இல்லை. ஆனால், திரிஷாவுக்கு நற்பணி மன்றம் ஆரம்பித்தால் தவறு. இதற்கு முன் எந்த நடிகைக்கும் நற்பணி மன்றம் ஆரம்பிக்கவே இல்லையா கொத்தூஸ்?


ஜெகதீசன்
ஆக 04, 2026 01:30

அட பாவிகளா... திருந்தவே மாட்டீங்களா? கோமாளித்தனத்திற்கு அளவே இல்லையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை