உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / உதயசூரியனை வீழ்த்திய உதயசந்திரன்: வாட்ஸ்ஆப் டிரெண்டிங்

உதயசூரியனை வீழ்த்திய உதயசந்திரன்: வாட்ஸ்ஆப் டிரெண்டிங்

அருப்புக்கோட்டை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடைய வாட்ஸ்ஆப்புகளில், 'உதய சூரியனை முடித்து வைத்த உதயசந்திரன்' என்ற செய்தி டிரெண்டிங் ஆக பரவுகிறது. தி.மு.க.வின் தோல்விக்கு ஆசிரியர், அரசு ஊழியர்களை அரசு கையாண்ட விதம் தான் முக்கிய காரணம் என சங்கத்தினர் கூறுகின்றனர். இதற்கு நிதித்துறை செயலாளராக இருந்த உதயசந்திரன் தான் சூத்திரதாரி என அவர்கள் குமுறுகின்றனர். அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளை திட்டமிட்டு புறக்கணித்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு என்பது அவர்களின் புகார். அவர் மீது உள்ள கோபத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்த தேர்தலில் தபால் ஓட்டுக்கள் மூலம் காட்டிவிட்டனர். இதனால், 'உதயசூரியனை முடித்து வைத்த உதய சந்திரன்' என குறிப்பிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை