மேலும் செய்திகள்
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
22-Dec-2025 | 2
இலையூர் சிவன் கோவிலில் மரகத லிங்கம் திருட்டு
19-Dec-2025 | 1
மூளைச்சாவடைந்த பெண் நால்வருக்கு வாழ்வளித்தார்
17-Dec-2025 | 3
சென்னை: கரூர் குளித்தலையில் நடந்த, தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டத்தில், ஸ்டாலின் அரசை கண்டித்து, கோஷம் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. நுாறு நாள் வேலை திட்டம் மாற்றத்தை கண்டித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில்,நேற்று தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கரூர் மாவட்டம், குளித்தலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கோஷங்களை எழுப்பிய, வி.சி., நிர்வாகி, 'கண்டிக்கின்றோம், கண்டிக்கின்றோம், ஸ்டாலின் அரசை கண்டிக்கின்றோம்' எனக் கோஷமிட, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்டோர், அதை திரும்ப கூறினர். அதன்பின் சுதாரித்த, தி.மு.க., நிர்வாகி, கோபத்துடன் வி.சி., நிர்வாகியிடம் இருந்து மைக்கை பிடுங்கி, மற்றொருவரிடம் வழங்கினார். அவர், ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம், மோடிக்கு வால் பிடிக்கும் ஆர்ப்பாட்டம், 100 நாள் வேலையை நிறுத்த துடிக்கும் ஆர்ப்பாட்டம் எனக் கோஷமிட, மற்றவர்கள் கோஷமிடலாமா, வேண்டாமா என தவிக்க, கூட்டத்தில் பெண்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
22-Dec-2025 | 2
19-Dec-2025 | 1
17-Dec-2025 | 3