உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / உலக கோப்பை கிரிக்கெட்: 70 வயது விவசாயி தேர்வு

உலக கோப்பை கிரிக்கெட்: 70 வயது விவசாயி தேர்வு

பொள்ளாச்சி: நியூசிலாந்தில் நடக்கும் 70 வயதானோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்திய அணியில், பொள்ளாச்சி விவசாயி தேர்வாகி உள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே காளியப்ப கவுண்டன்புதுாரைச் சேர்ந்த விவசாயி உதயகிரி காசியப்பன், 70. இவர், நியூசிலாந்தில் நடைபெறும், 70 வயதானோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்கு விளையாட தேர்வாகி உள்ளார். அவர் கூறியதாவது: சொந்த ஊரில் விவசாயம் செய்கிறேன். பி.காம்., படித்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது கிரிக்கெட் விளையாடுவேன். இங்கிலாந்து, நியூசிலாந்து, கனடா, இலங்கை உள்ளிட்ட எட்டு நாடுகள் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றன. 70 வயதானோருக்கான கிரிக்கெட் போட்டி அணி தேர்வு மும்பையில் நடைபெறுவது தெரிந்து, அங்கு சென்று, இரண்டு போட்டிகளில் விளையாடினேன். தேர்வாளர்கள், தமிழகத்தில் இருந்து என்னை தேர்வு செய்தனர். உலக கோப்பை இந்திய அணிக்காக, 16 பேர் கொண்ட அணியில் என்னை தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். விளையாட வயது தடையல்ல; நாம் விளையாடுவதால் உடல் ஆரோக்கியம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை