கு.அருணாச்சலம், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேசப்பற்றை ஒழித்து மொழி மற்றும் ஜாதி என, பிரிவினை அரசியல் செய்து வரும் திராவிட கட்சிகளால், தமிழகத்தில் தேசிய கட்சிகள் வேரூன்ற முடியவில்லை. 'காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம்' என்று கூறிய காங்கிரஸ் கட்சிக்கு, அதற்கான வாய்ப்பு, கடந்த 2006 சட்டசபை தேர்தலில் கிடைத்தது.ஆனால், 96 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க.,விற்கு, 34 இடங்களில் வெற்றி பெற்ற காங்., வெளியில் இருந்து ஆதரவு தந்து, தி.மு.க.,வை அரியணையில் ஏற்றியதே தவிர, தமிழக அமைச்சரவையில் பங்கு கேட்கவில்லை. காரணம், கோஷ்டி பூசல்!இரு திராவிடக் கட்சிகளுமே தமிழகத்தில் தேசிய கட்சிகள், பிற கட்சிகளை வளர விடாமல் செய்ததுடன், அக்கட்சிகளின் ஓட்டுகளை பெற்று, தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றன. அதேநேரம், ஆட்சியில் பங்கு தர ஒருபோதும் முன்வந்தது இல்லை. இந்நிலையில், நடிகர் விஜய், த.வெ.க., எனும் கட்சியை துவக்கி, கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் தர தயாராக இருப்பதாக கூறியது, அனைத்துக் கட்சிகளையும் யோசிக்க வைத்து விட்டன. பா.ஜ., மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை, அக்கட்சியின் ஓட்டு வங்கியை, 18 சதவீதமாக உயர்த்தியது மட்டுமன்றி, தாமரை சின்னத்தை தமிழகம் முழுதும் கொண்டு சேர்த்தார்.படித்த, நேர்மையாளரான அவர், 2026ல் பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றே பலரும் நினைத்தனர். அதேநேரம், 2024 பார்லிமென்ட் தேர்தலில், பா.ஜ.,வின் தலைமையில் மூன்றாவது அணி போட்டியிட்டதால், தி.மு.க., கூட்டணி எளிதாக வெற்றி பெற்றது. அந்த வெற்றி வாய்ப்பை மீண்டும் தி.மு.க.,விற்கு வழங்க, பா.ஜ., தலைமை விரும்பவில்லை. ஏனெனில், ஆளுங்கட்சியான தி.மு.க., அமைச்சர்கள் தொடர்ந்து ஹிந்து கடவுள்கள் மற்றும் ஹிந்து மதத்தை அவமதிப்பு செய்து பேசி வருவதும், அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவுப் படுத்தும் வகையில் பேசிய பேச்சால், நிச்சயம் ஒவ்வொரு ஹிந்துவும், பெண்களும் தி.மு.க.,விற்கு ஓட்டு போட சிந்திப்பர்.என்னதான் பணத்தை வாரி இறைத்தாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சியில் நடந்த பல ஊழல்களும் சேர்ந்து, அக்கட்சிக்கு, 118 சீட்டுகள் கிடைப்பதே அதிகம் தான். இதை உணர்ந்த அ.தி.மு.க., - பா.ஜ., தலைமை, கூட்டணிக்கு உடன்பட்டு உள்ளன. அதேநேரம், வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனால், பா.ஜ., மற்றும் இதர கட்சிகளின் ஆதரவுடன், அ.தி.மு.க., ஆட்சியில் அமரும்போது, கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும்; அதை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது பா.ஜ., தலைமை. எப்படி நோக்கினும், தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புகள் அதிகம்! வாயால் கெடும் பொன்முடி!
என்.வைகை
வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: பெரியார்
திராவிடர் கழகம் சார்பில், விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில்,
பெண்களையும், சைவ - வைணவ மதங்களையும் தரக் குறைவாகப் பேசி, அனைவரின்
கண்டத்துக்கும் ஆளாகியுள்ளார், வனத்துறை அமைச்சர் பொன்முடி. பொதுவாகவே, பெண்களை இழிவுப்படுத்திப் பேசுவதில், பொன்முடிக்கு எப்போதும்அளவில்லாத ஆனந்தம் தான்!பேருந்தில் இலவச பயணம் செய்யும் பெண்களை, 'ஓசி தானே' என்று ஏளனமாக கேட்டு, நக்கல் செய்து, அதில் பேரின்பம் கண்டவர்!இவர் மட்டுமல்ல... இவரது முன்னோடிகளின் வரலாறே இத்தகைய ஆபாச பேச்சுகள் நிரம்பியது தான்!தமிழக
சட்டசபையில் நடிகை பானுமதி குறித்து அண்ணாதுரை பேசியதையும், முன்னாள்
பிரதமர் இந்திரா மற்றும் காங்., தலைவர் சோனியா குறித்து கருணாநிதி
தரக்குறைவாக விமர்சனம் செய்ததையும் தமிழக மக்கள் நன்கு அறிவர்!இவர்களை
எல்லாம் தலைவர்களாக ஏற்று, அவர்கள் காட்டிய வழியில் பீடுநடைபோடும்
பொன்முடி, பெண்கள் குறித்து மலிவாக பேசியதில் ஆச்சரியமில்லை! ஹிந்து மதம், பெண்கள் குறித்து உயர்வாக அவர் பேசி இருந்தால் தான், ஆச்சரியப்பட வேண்டும்!துணைப் பொதுச்செயலர் பதவி மட்டுமே பொன்முடியிடமிருந்து தற்போது பறிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் பதவியிலிருந்தும் அவர் விலக்கப்பட வேண்டும் என்ற பலரது கோரிக்கையை, முதல்வர் ஸ்டாலின் ஏற்பாரா என்பது தெரியவில்லை.'தவளை தன் வாயால் கெடும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, அநாகரிக பேச்சால், பொன்முடி தன் அரசியல் வாழ்வுக்கு விரைவில் முடிவு கட்டிவிடுவார்! மாநில சுயாட்சி: துருப்பிடித்த அஸ்திரம்!
கோ.பாண்டியன்,
செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மாநிலங்களின்
உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது. மக்களின் உரிமைகளை பாதுகாக்க,
'மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி' என்ற முழக்கத்தை
செயல்படுத்தி, மக்களாட்சி தத்துவத்தை இந்தியாவில் முழுமையாக மலரச்
செய்வோம்' என்று சட்டசபையில் பேசியுள்ளார், முதல்வர் ஸ்டாலின். மத்தியில் பதவி சுகத்தை அனுபவிக்கும் போதெல்லாம், இவர்களுக்கு மாநில சுயாட்சி தொடர்பான மறதி நோய் வந்துவிடும்.எப்போதெல்லாம்
தேர்தல் ஜுரம் வருகிறதோ, அப்போது, கோமாவில் இருந்து மீண்டவர்கள் போல்
மீண்டும் மாநில சுயாட்சி, திராவிட நாடு, ஹிந்தி எதிர்ப்பு போன்ற,
துருப்பிடித்த கத்திகளை துாக்கி கொண்டு அலைவர். அண்ணாதுரையும்,
கருணா நிதியும் துாக்கி சுமந்த மேற்கண்ட சித்தாந்தங்கள் போணி ஆகாததால்,
அவர்கள் காலத்திலேயே, அதை துாக்கி பரணில் போட்டு விட்டனர். தற்போது
தேர்தல் வெற்றிக்காக அவற்றை துாசி தட்டி எடுத்து வந்துள்ளார், ஸ்டாலின்.புதிதாக
எதையும் தன்னால் சிந்திக்க இயலவில்லை என்பதை சொல்லாமல் சொல்லி, கருணாநிதி
தயாரித்த புளித்துப் போன பழைய கள்ளை, புதிய மொந்தையில் ஊற்றி, தமிழக
மக்களுக்கு விற்க முயற்சிக்கிறார். 'அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு' என்று கூறினார், அண்ணாதுரை. தி
ராவிட நாடு கிடைக்கவில்லை; இதற்காக சுடுகாட்டிற்கு போனவர்கள் தி.மு.க.,வில் எவராவது இருக்கின்றனரா? மாநில
சுயாட்சி தான் கிடைக்கவில்லையே என்பதற்காக, தி.மு.க., தேர்தலில் நிற்காமல்
ஒதுங்கி கொண்டதா? ஹிந்தி திணிப்பு என்று நாடகமாடும் தி.மு.க.,வினர்,
தாங்கள் நடத்தும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை இழுத்து தான் மூடிவிட்டனரா? ஸ்டாலின்
ஆசைப்படியே மாநில சுயாட்சி கிடைத்துவிட்டதாக வைத்துக் கொள்வோம்... அண்டை
மாநிலங்களான கேரளாவுடன் முல்லை பெரியாறு பிரச்னை, கர்நாடகாவுடன் காவிரி
நீர் பிரச்னை, ஆந்திராவுடன் தெலுங்கு - கங்கை பிரச்னைகளை தீர்த்து
வைக்கக்கோரி யாரிடம் சென்று முறையிடுவாராம்?