உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / மனநிலையை மாற்றுங்கள் பெற்றோரே!

மனநிலையை மாற்றுங்கள் பெற்றோரே!

-மரகதம் சிம்மன், கலிபோர்னியா, அமெரிக்காநாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தமிழகத்தில் ஒரு பள்ளிக்கூடத்தைப் பெருக்கி சுத்தம் செய்ய, மாணவ - மாணவியரை, ஆசிரியர்கள் பணித்தனர்என்றும், மாணவியரின் பெற்றோர் கொந்தளித்துப் போயினர் என்றும் செய்தி வெளியாகி இருந்தது.நாம் இருக்கும் இடத்தையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நம் கடமைதானே? பள்ளிப் பருவத்திலேயே இத்தகைய பணிகளை செய்யக் கற்றால், வீட்டு வேலைகளையும்சுலபமாக செய்யலாமே! இதில் தவறு ஒன்றும் இல்லையே? பெற்றோர் எதற்கு இவ்வளவு செல்லம் கொடுத்து, குழந்தைகளை வளர்க்க வேண்டும்?நான், அமெரிக்காவில், ஓரேகான் என்ற இடத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு சேரப்போகும் மாணவர்களுக்காகவும், பெற்றோர்களுக்காகவும், பல்கலை நிர்வாகம், ஒரு மீட்டிங் வைத்திருந்தது. மீட்டிங்கில், 1,000 பேர் பங்கேற்றனர்.மீட்டிங் முடிந்ததும், அந்த மாணவர்களே,1,000 மேஜை, நாற்காலிகளையும் அப்புறப்படுத்தி, உரிய இடத்தில் வைத்தனர்;மேற்பார்வை செய்யவும் யாரும் வரவில்லை.பொறுப்புடன் அனைத்து வேலைகளையும்முடித்து, அந்த இடத்தையும் சுத்தம் செய்தனர்.எந்த மாணவரும், இந்த வேலைகளை இழிவாக நினைக்கவில்லை. எனக்கே அது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது!அப்போது நம் தமிழகம் தான் நினைவுக்கு வந்தது. 'நம்மூரில் மாணவர்கள் இந்த மாதிரி வேலைகளை செய்தால், பெற்றோர் கொந்தளித்து, பொங்கியெழுவரே...' என நினைத்துக் கொண்டேன்.பிள்ளைகளுக்கு செல்லம் கொடுத்து வேலைகளில் தராதரம் பார்க்க சொல்லிக் கொடுப்பதைவிட, நம் சுற்றுப்புறத்தை நாம்தான் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதாக, பெற்றோர் தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்! பிராமணர்களுக்கும் பாதுகாப்பு அவசியம்!வெ.சீனிவாசன், திருச்சியில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் பிராமணர்களுக்கும், பிற சிறுபான்மை மக்களைப் போலவே, அரசின் உரிய பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என்று, சிலஅமைப்புகள் போராடின.இது மிகவும் அவசியமானது;வரவேற்க வேண்டியது. 40 - -50 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டிய போராட்டம் தான் இது!இன, மொழி, மத, ஜாதிபிரிவினைவாதம் பேசும் பல கட்சிகளுக்கு, பிராமணஎதிர்ப்பு அரசியல் என்பதுமுக்கியம். பிராமணர்களைப்பற்றி தொடர்ந்து இத்தகையஅரசியல், ஜாதி கட்சிகள்,தவறான, பொய் பிரசாரங்களை, தங்கள் சுயநலத்திற்காக பரப்பி வருகின்றன.அதை மக்கள் நம்புகின்றனரா,இல்லையா என்பது, மில்லியன் டாலர் கேள்வி. பிராமணர்கள் பொதுவாகரொம்பவும் அடக்கமான, அமைதியான, தெய்வ பக்தி,ஆன்மிக சிந்தனை, நேர்மை,நியாயம், தர்மத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள். தாங்கள்உண்டு, தங்கள் வேலைஉண்டு என்றிருப்பவர்கள். செய்யும் பணிகளில்திறமைக்கும், அர்ப்பணிப்புக்கும் பெயர் பெற்றவர்கள். ஜம்மு - காஷ்மீரில் எப்படிதீவிரவாதம், வன்முறைகள்வாயிலாக ஹிந்துக்கள்வெளியேற்றப்பட்டனரோ,அதேபோல, விரோத அரசியல், சட்டங்கள் வாயிலாக,சத்தமில்லாமல் பல பிராமண குடும்பங்கள், தமிழகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படுத்தப்பட்டது. பிராமணர்களை அவமதிப்பது, நிந்திப்பது, அவர்களின் குடுமிகளை, பூணுால்களை அறுப்பது,அவர்கள் வீடுகளை சேதப்படுத்துவது, அவர்கள்பரம்பரை பரம்பரையாகசெய்து வந்த பணிகளைஅவர்களிடமிருந்து பிடுங்கிக்கொள்வது. பிராமணர்களுக்கு தீங்கு விளைவித்தவர் களின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கைகள்எடுக்காமல் இருப்பது போன்றவை, பிராமண சமூகத்தின் பாதுகாப்பற்ற நிலைக்கு வழிவகுக்கிறது.பல அரசியல்வாதிகள், தங்கள் பிராமண எதிர்ப்பு பேச்சுகளின் மூலம், விஷத்தைக் கக்குகின்றனர்.பிராமண எதிர்ப்பு செய்யும்அரசியல் கட்சிகள், அமைப்புகள் தங்கள் காலத்திற்கு ஒவ்வாத பிராமண எதிர்ப்புக்கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர்களை தவறாக, பொய்யாக, இழிவு படுத்தி பேசுபவர்கள், வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுபவர்கள் மீது, விரைந்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது, மாநில, மத்திய அரசுகளின் கடமை.அதே தவறை செய்யாதீர்கள் விஜய்!என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'நமக்கு தேசிய அளவில் பா.ஜ.,வும், மாநில அளவில்தி.மு.க.,வும் பொது எதிரிகள்' என, த.வெ.க., தலைவர் விஜய் கூறுகிறார்.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புதிதாக கட்சிதுவங்கியபோது, தி.மு.க.,வை கடுமையாக எதிர்த்து, தன் அரசியல் பயணத்தை துவக்கினார்;ஆனால், மத்தியில் ஆட்சிசெய்தவர்களை எதிரியாகபார்க்காமல், அனுசரணையோடு நடந்து கொண்டதால்,மத்திய அரசிடம் அவர் வைத்த கோரிக்கைகள்அனைத்தும் தங்கு தடையின்றி நிறைவேறின. தி.மு.க.,வினர் அப்படி அல்ல; எதற்கெடுத்தாலும்எதிர்ப்பு தெரிவித்து, திட்டங்களின் பலன் குறித்துமுழுதும் அறிந்திருந்தாலும்,மத்திய அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என்ற சிந்தனையில் மட்டுமே மூழ்குகின்றனர்;அதன்படி எதிர்க்கின்றனர்.இலவசம் என்ற மாமிசத்துண்டைக் காட்டி ஆட்சியில்அமரும் இவர்களால், கூண்டில் சிக்கிய புலிகளாக,மக்கள் தவிக்கின்றனர்.நடிகர் விஜய் இதை எல்லாம் பார்த்த பிறகும்,மத்தியில் ஆட்சி நடத்தும் பா.ஜ.,வை எதிர்ப்போம் என்று சொல்வது புத்திசாலித்தனமாகத்தெரியவில்லை ஆரம்பமே, மத்திய அரசுடன் முட்டல், மோதல்போக்கைக் கடைப் பிடித்தால், இவரின் அரசியல் பயணம் வெற்றிகரமாகஅமையாமல் போய்விடும்.முக்கியமான திட்டங்களில்மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதில் தவறுஇல்லையே!எம்.ஜி.ஆர்., மத்திய அரசுடன் மட்டுமல்லாமல்,அண்டை மாநிலங்களான,கர்நாடகா, கேரளா, ஆந்திரஅரசுகளுடன், நட்புறவு வைத்திருந்ததால், காவிரி, பாலாறு பிரச்னைகள் தலைதுாக்கவே இல்லை.எம்.ஜி.ஆரின் இந்த ராஜதந்திரம் காரணமாகத் தான், அவரை எதிர்த்து கருணாநிதியால்அரசியல் செய்ய முடியவில்லை. நடிகர் சீமான் கட்சிஆரம்பித்து அடைந்த தோல்விகளைப் பார்த்த பின்னும், நடிகர் விஜய் அதேதவறை செய்யக் கூடாது.முடி திருத்தும் கலைஞர்களைபோற்றுவோம்!ஆர்.கண்மணி, சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், ஆர்.ஜேம்ஸ் என்பவர் எழுதிய கடிதம் இப்பகுதியில் வெளியாகி இருந்தது. அதில், முடி திருத்தும் கலைஞர்கள் குறித்த ஒரு குறிப்பு இருந்தது. இக்கலைஞர்கள் ஒரே ஒரு நாள் தங்கள் வேலையை தற்காலிகமாக நிறுத்தினால்,எப்பேர்பட்ட பிரச்னைகள்ஏற்படும் என்பதை நாம் அறிவோம். அவர்களின் பணியைப் போற்றுவோம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

YRM sisters
நவ 21, 2024 21:24

வளர்க்கும் போதே பெற்றோர்கள் நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் நாளைய நல்ல மனிதர்கள் ஆகவும் நல்ல தலைவர்கள் ஆகவும் முடியும். அடுத்தவர் வீட்டு பொருளுக்கு ஆசை இல்லாதவர்களாக வளர்க்க வேண்டும். தங்கள் உழைப்பிலேயே உயர வேண்டும் என சொல்லி வளர்க்க வேண்டும்.


D.Ambujavalli
நவ 12, 2024 18:00

பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒருவரும் சொல்லாமலே விழாக்கள் வகுப்புகள் முடிந்ததும் சுத்தம் செய்வதை வழக்கமாகவே வெளிநாடுகளில் கொண்டுள்ளதால், வாழ்க்கை முறையில் சுத்தத்தின் அவசியத்தை பாடமுறையை விட நேரடியாக கற்கின்றனர் தன் இடத்தைப் பராமரிப்பது அவமானமானது என்ற எண்ணத்தையே இங்குள்ள பெற்றோர்கள் மக்கள் மனங்களில் விதைக்கிறார்கள்


என்றும் இந்தியன்
நவ 12, 2024 17:00

பள்ளியை சுத்தம் செய்தல் இது ஜப்பானிய கல்வி முறை கடைபிடிப்பது இது மிக மிக நல்லதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை