உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / தி.மு.க.,வின், பி டீமா பழனிசாமி!

தி.மு.க.,வின், பி டீமா பழனிசாமி!

ஆர்.சந்தானம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஹிந்து கோவில் பணத்தை எடுத்து கல்லுாரி கட்டுவோம்' என்ற தி.மு.க., அரசை விமர்சித்து, சாமி ஆடியவர் தான் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. ஆனால், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் நடந்த, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், 'வரும் 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால், கோவில் நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு, அந்நிலத்தை சொந்தமாக்க நடவடிக்கை எடுப்போம்' என்று கூறியுள்ளார். கோவில் நிலங்கள் என்ன அ.தி.மு.க.,வின் சொத்தா எடுத்து தானம் செய்ய? ஏன் சர்ச் சொத்துக்களையும், வக்ப் சொத்துக்களையும் இப்படி தானம் செய் வதாக கூற வேண்டியது தானே... 'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' என்பது போல், கோவில் சொத்துக்கள் என்ன வருவோர் போவோர் எல்லாம் எடுத்து வீசும் சூரைத் தேங்காயா? பதவி மீதான வெறி, மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது? ஏற்கனவே, தேர்தல் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.,வுடனும் பழனிசாமிக்கு உண்மையான நட்பு இல்லை. ஏதோ ஒப்புக்கு கூட்டணி வைத்துள்ளது போல் நாளொரு விமர்சனமும், பொழுதொரு கேலியும் செய்து வருகிறார். அதேநேரம், என்னதான் பழனிசாமி குட்டிக்கரணம் அடித்தாலும், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்காது. நிலைமை இப்படியிருக்க, 'குடியிருப்போருக்கே கோவில் நிலம் சொந்தமாக்கப்படும்' என்ற பேச்சால், ஹிந்துக்களின் ஓட்டுக்கும் குழிபறித்துள்ளார். இவரது நடவடிக்கைகள் அ.தி.மு.க., மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு பதிலாக சந்தேகத்தை தான் ஏற்படுத்துகிறது. ஒருவேளை, கழகம் மீண்டும் ஆட்சியில் அமர்வதற்காக, தி.மு.க.,வுடன் மறைமுகமாக ஒப்பந்தம் செய்து, அக்கட்சியின், 'பி' டீம் ஆக பழனிசாமி இயங்கிக் கொண்டிருக்கிறாரோ?  மத்திய அரசின் நிதி என்னவானது? ஆர்.நாராயணசாமி, கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில், 100 நாள் வேலைக்கும், புதிய பள்ளிகள் கட்டுவதற்கும், 'ஜல் ஜீவன்' திட்டத்திற்கும் தர வேண்டிய, 3,500 கோடி ரூபாயை மத்திய அரசு நிறுத்தி விட்டது. இந்த ஆண்டுக்கான, 4,000 கோடி ரூபாயையும் தரவில்லை. 'மத்திய அரசிடம் இருந்து ஒவ்வொரு முறையும் போராடித்தான் நிதியை பெற வேண்டியுள்ளது. கடுமையான நிதி நெருக்கடி யிலும் மற் ற மாநிலங்களை விட மிகச் சிறப்பாக, தமிழக முதல்வர் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார்' என, புலம்பியுள்ளார், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு. தி.மு.க.,வில் இப்போது எவருமே நிதானமாக பேசுவது இல்லை. முதலில் மத்திய அரசு நிதியே வழங்கவில்லை என்கிறார், நேரு. பின், ஒவ்வொரு முறையும் போராடித்தான் நிதியை பெற வேண்டி இருக்கிறது என்றும் சொல்கிறார். அதாவது, மத்திய அரசு நிதி கொடுக்கிறது; அதை கொஞ்சம் காலதாமதமாக கொடுக்கிறது என்பது இவர் பேச்சில் இருந்தே வெளிப்படுகிறது. எனில், 7,500 கோடிகளை வாங்கி, கஜானாவை நிரப்பிக் கொண்டு, மத்திய அரசு நிதியே வழங்கவில்லை என்று குற்றம் சாட்டுவதில் என்ன நியாயம் உ ள்ளது? நிதி நெருக்கடியிலும், மற்ற மாநிலங்களை விட மிகச் சிறப்பாக அனைத்து திட்டங்களையும் முதல்வர் நிறைவேற்றி உள்ளார் என்று கூறியுள்ளார். அப்படியெனில், மத்திய அரசு கொடுத்த, 7,500 கோடி ரூபாய் என்ன ஆனது? கழகத்தினர் அனைவரும் பங்கு போட்டு விட்டனரா?  சோற்றுக்குள் ஒளிந்திருக்கும் அரசியல்! எஸ்.ஸ்ரீதேவி சிவகுமார், பாம்பனார், கேரளாவில் இருந் து அ னுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'காமராஜர் ஆட்சியில், பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நுாற்றாண்டு கல்விக் கனவுக்கான அடித்தளம். நல்லவேளை, பள்ளிகளில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோ று போட அது என்ன ஹோட்டலா என்று அதிமேதாவியாய் பேசும் அறிவுக் கொழுந்துகள் அன்று இல்லை. 'அதனால், எத்தனை நன்மை தமிழகத்திற்கு இன்று' என ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார், முதல்வர் ஸ்டாலின். இந்த அறிக்கை காமராஜர் பிறந்தநாளுக்கானது என்றாலும், 'பள்ளிக் குழந்தைகளுக்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த காமராஜரை, ஆண்டுகள் பல கடந்தும் இன்றும் நாடு போற்றுகிறது. 'ஆனால், காலை உணவு திட்டத்தை கொண்டு வந்த நம்மை போற்றாமல் துாற்றுகின்றனரே...' என்ற கவலை அதில் மறைந்திருப்பதை நன்றாகவே உணர முடிகிறது. காமராஜர் ஆட்சிக் காலத்தில், பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்ததை எவருமே எதிர்க்கவில்லை என்பது உண்மைதான். காரணம், அக்காலத்தில் நாட்டில் நிலவிய பஞ்சம், வறுமை! இதன்காரணமாக, பள்ளி செல்ல வேண்டிய சிறுவர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய அவல நிலை இருந்தது. அதனால் தான், 'எப்படியாவது பிள்ளைகளை பள்ளிக்கு வரவழைத்து விட வேண்டும். 'அவர்கள் கல்வி கற்க உணவு ஒரு தடையாக இருக்க கூடாது' என்று நினைத்து, மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தார், காமராஜர். ஆனால், பள்ளிகள் கட்டவும், மதிய உணவு திட்டத்திற்கும் அரசு கஜானாவில் போதுமான நிதியில்லை. எனவே, வருமானத்தை அதிகரிக்க மதுக்கடைகளை திறக்கலாம் என்று அதிகாரிகள் யோசனை தெரிவித்த போது, பிச்சை எடுத்தாவது பிள்ளைகளை படிக்க வைப்பேனே தவிர, தகப்பனை குடிக்க வைத்து , பிள்ளைகளை படிக்க வைக்கும் பாவச் செயலை ஒருபோதும் செய்ய மாட் டேன்' என்றார் காமராஜர். அவரைப் போன்ற தலைவர்கள் தொடர்ந்து தமிழகத்தை ஆட்சி செய்திருந்தால், வறுமை என்றோ ஒழிந்திருக்கும். ஆனால், கடந்த 58 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்யும் திராவிட கட்சிகளால், இன்றும் மக்கள் வறுமையில் தான் வாடுகின்றனர். 'பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு கொடுக்கக் கூட பெற்றோரால் முடியவில்லை. எனவே, காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்' என்று ஆட்சியாளர்கள் கூறுவது, தமிழகத்திற்கு தலைகுனிவு தானே தவிர பெருமையல்ல! காமராஜர் அடுத்த தலைமுறையை நினைத்து தான், ஒவ்வொரு திட்டத்தையும் கொண்டு வந்தாரே தவிர, அடுத்த தேர்தலில் ஓட்டுகளை பெற வேண்டும் என்பதற்காகவோ, புகழுக்கு ஆசைப்பட்டோ எந்த திட்டத்தையும் துவங்கியது கிடையாது. ஆனால், திராவிட மாடல் ஆட்சியாளர்கள், தங்களை பெரியவள்ளல்களாக நினைத்துக் கொண்டும், அடுத்த தேர்தலில் ஓட்டுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், இலவசங்களை கொடுத்து மக்களை கையேந்துவோராக வைத்துள்ளனர். காமராஜர் போன்று நல்லாட்சி நடத்தி, வறுமையை ஒளித்திருந்தால், இன்றும் பள்ளிகளில் சோறு போட வேண்டிய அவல நிலை வந்திருக்காதே! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Nagarajan S
ஆக 03, 2025 20:03

பேசத்தெரியாமல் பேசி குடியிருப்போருக்கே கோவில் நிலம் சொந்தமாக்கப்படும் என்ற பேச்சால், ஹிந்துக்களின் ஓட்டுக்கும் குழிபறித்துள்ளார்.


D.Ambujavalli
ஆக 02, 2025 17:12

பெயர், ஊர் சொல்ல விரும்பவில்லை ஒரு திருமணத்துக்கு ஒப்பந்தக்காரரிடம் பேரம் பேசினார் என் உறவினர் ஒருவர், அங்கன்வாடியில் மேற்பார்வையாளராக இருந்தவர், ‘அரிசி, பருப்புகள், எண்ணெய் கணிசமான கிலோ அளவும், இரண்டு, மூன்று டின் கள்வரை ‘வரும்’ என்றும், மீதி மாளிகைகள் மட்டுமே வாங்க வேண்டும் என்றும் தெரிவித்ததைக்கண்டு, பிள்ளைகளுக்கு உணவு வழங்கப்படும் அழகைத் தெரிந்துகொண்டேன். எந்தத்திட்டத்திலும் ‘அடிக்க’ மட்டுமே தெரிந்த மாடல் அரசு என்பதுதான் unmai


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை