உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / தி.மு.க., போல் வெறுப்பை சம்பாதிக்காதீர்கள்!

தி.மு.க., போல் வெறுப்பை சம்பாதிக்காதீர்கள்!

ச.ஜான் பிரிட்டோ, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்திற்கென தனி கொடியை உருவாக்க வேண்டும்' என்று கூறியுள்ளார், தமிழக வெற்றிக் கழக அரசின் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. தமிழகத்திற்கு மட்டும் எதற்கு தனிக் கொடி? சாக மாட்டாதவன் 'சங்கரா... சங்கரா...' என்பது போல், மாநிலத்தின் வளர்ச்சி குறித்து சிந்திக்காமல், இந்தியாவில் இருந்து தமிழகத்தை எப்படி தனியாக பிரிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர். ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் தேசியக் கொடி இருக்கும் போது, தமிழகத்திற்கு எதற்கு தனிக் கொடி? ஹிந்தி, வந்தே மாதரம் பாடலை வைத்து, தி.மு.க., அரசியல் செய்வது போல், த.வெ.க., அரசியல் செய்ய தனிக் கொடி என்ற, 'கான்செப்ட்' தேவைப் படுகிறது போலும்! இதுபோன்ற குறுகிய சிந்தனையாளர்களின் குறுக்குப் புத்தியால் தான், இந்தியா முகலாயர்களாலும், ஆங்கிலேயர்களாலும் பல நுாறு ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்தது. இப்போதும், நாடு ஒற்றுமையுடன் சீரான வளர்ச்சியில் செல்வது, காங்கிரஸ் உள்ளிட்ட, 'இண்டி' கூட்டணிக்கு பிடிக்கவில்லை. அதனால், வாக்காளர் சீர்திருத்த பட்டியலை எடுத்து வந்து கலகம் செய்து கொண்டிருக்கிறது. அவ்வகையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவோ, தனக்கு தெரிந்த வகையில், பிரிவினைக்கு துாபம் இடுகிறார். ஏற்கனவே, தி.மு.க., ஆட்சியில் எதை எல்லாம் தமிழக மக்கள் வெறுத்து வந்தனரோ, அதையே தற்போது, த.வெ.க., அரசும் செய்து வருவதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது. நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி புல்லுக்கும் பாய்வது போல், நடிகர் விஜய் என்ற பிம்பத்தால், அதிகாரத்திற்கு வந்துள்ள அமைச்சர், இதுபோன்ற பிரிவினை கருத்துக்களை மக்களிடம் விதைப்பது, த.வெ.க.,வின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல! 'ஓட்டுக்கு துட்டும் வேண்டாம்; இலவச திட்டங்களும் வேண்டாம்; நல்லாட்சி கொடுத்தால் போதும்' என்று எண்ணியே மக்கள், த.வெ.க.,விற்கு வாய்ப்பளித்துள்ளனர். விஜய், இது போன்று பிரிவினை வாதம் பேசுபவர்களை முளையிலேயே கண்டித்து வைப்பது நல்லது! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
நவ 11, 2026 14:36

ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் என்பது போல் 2026 தேர்தல் சூறாவெளியில் திராவிட கட்சிகள் தடம் புரண்டுள்ளன.. திமுக போலவே தனிக்கொடி தனி தமிழ்நாடுயென்று ஆரம்பித்தால் முகத்திரை கிழிந்து ஆட்டம் குளோஸ்.


D.Ambujavalli
நவ 10, 2026 23:23

'கிடக்கிறதெல்லாம். கிடக்கட்டும், கிழவியைத்தூக்கி. . மணையில் வை'. என்பதுபோல். மாநிலத்தில். கழுத்துமட்டும். கடன், தலை போகிற, தினம். 'தலைகள்'. போகிற. பிரச்னைகள், கிடக்க, அத்தனையையும். திசை. திருப்ப. இந்த. 'தனிக்கொடி'. நாடகம். போலிருக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை