உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / வேண்டாம் ஊழல் பைல்ஸ்!

வேண்டாம் ஊழல் பைல்ஸ்!

ஆர்.சுதாங்கன், ஈரோட்டில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., அரசின் ஊழல்களை தொகுத்து, ஏற்கனவே இரு பைல்ஸ் வெளி வந்திருந்த நிலையில், அடுத்ததாக, 'பைல்ஸ் - 3 வரும்; 2025 துவக்கத்தில் வெளியிடப்படும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். அண்ணாமலையை மன்றாடி, கேட்டுக் கொள்கிறேன்... தயவு செய்து, இனிமேலும்இதுபோன்று, பைல்ஸ்களை வெளியிட வேண்டாம். இந்நாட்டிலுள்ள நீதிமன்றங்கள் அனைத்திலும், மைக்கேல் டி.குன்ஹா போன்றஒரு சில நீதிபதிகள் தான் இருக்கின்றனரேதவிர, பெரும்பாலானோர் நீதிபதி குமாரசாமியை போல் தான் இருக்கின்றனர். அதனால் தான், நீதிமன்ற சுவரிலேயே, 'இது வழங்கப்பட்ட தீர்ப்பா அல்லது வாங்கப்பட்ட தீர்ப்பா?' என்று தைரியமாக போஸ்டர் அடித்து ஒட்ட முடிகிறது.இந்நாட்டிலுள்ள சட்டங்கள் அனைத்தும்,சாமானிய மக்களுக்கு எதிராகவும், அரசியல்வாதிகளுக்கு ஆதரவாகவும் தான் உள்ளன.'ஊழல் குற்றச்சாட்டுகளில், சிறை தண்டனை பெற்றிருந்தாலும், சம்பந்தப்பட்ட அரசியல்வாதி பதவி விலக தேவைஇல்லை' என்று நேரடியாக சொல்லவில்லையே தவிர, பதவியில் தொடர்வதற்கானஅத்தனை ஷரத்துக்களும் மறைமுகமாக உள்ளன.மத்திய அரசும், போகும் இடம் எல்லாம்ஊழல், ஊழல் என்று ஓயாமல் சங்கு ஊதிக் கொண்டிருக்கிறதே தவிர, இதுவரை, எந்த ஊழல்வாதியின் மீதும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.அதனால், பைல்ஸ் மூன்று அல்ல... 30 வந்தாலும், ஆட்சியில் அமர்ந்து இருப்போரை, 1 மில்லி மீட்டர் அளவுக்குக்கூட அசைக்க முடியாது.அண்ணாமலை இதுவரை வெளியிட்ட இரண்டு பைல்ஸ்களால், எந்த அரசியல்வாதிக்காவது தண்டனை வாங்கி கொடுக்க முடிந்ததா... இல்லையே!அதனால், எதற்காக வேலை மெனக்கெட்டு, உடலை வருத்தி, ஊழல் புராணங்களை நோண்டி நொங்கெடுத்து வெளியிட்டு கொண்டிருக்கிறீர்கள்?அரசியல்வாதிகளும் திருந்த மாட்டர்;மக்களும் இலவசங்களுக்கு மயங்கி நேர்மையான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.அதனால், போதும் பைல்ஸ்! வெட்கமாக இல்லையா?கு.அருண், கடலுாரிலிருந்துஅனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபையில், சிலஎம்.எல்.ஏ.,க்கள் தங்களதுதொகுதிகளில் தடுப்பணைகள் கட்ட, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கோரிக்கை வைத்தனர்.அதற்கு, 'அடிக்கிற மழைக்கு அணையே தாங்கல... தடுப்பணை கட்டினால் போதாது' என்று பதில் கூறியுள்ளார். காவிரி ஆற்றின் வெள்ளப்பெருக்கை தடுக்க, வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் பாயும் காவிரியாற்றின் நீர் பரப்பின் மீது, கல்லணை கட்டினான், மாமன்னன் கரிகால் சோழன்.எந்த நவீன வசதிகளும் இல்லாத அக்காலத்தில், ஆற்றில் பெரிய பாறைகளைகொண்டு வந்து போட்டு, அப்பாறைகள் நீரின் அரிப்பின் காரணமாக, கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து போன பின், அதன் மீது மற்றொரு பாறையை வைத்து, தண்ணீரில் கரையாதஒருவித களி மண்ணால் பூசி, பின் மணலில், அணை முழுதும் அடித்தளம்அமைத்தாராம்...இதோ... 1,900 ஆண்டுகள்கழித்தும், இன்னும் உறுதியாக இருக்கிறது, கரிகாலன் கட்டிய கல்லணை!ஆனால், இன்றைய திராவிட மாடல் ஆட்சியில்,திருவண்ணாமலை மாவட்டத்தில், அகரம் பள்ளிப்பட்டு- - தொண்டமானுார் கிராமத்தின் இடையேதென்பெண்ணை ஆற்றின்குறுக்கே, 16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலம், கட்டிய மூன்றுமாத்திலேயே வெள்ளத்தில்அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அதற்கு ஆட்சியாளர்கள்கூறிய காரணம் என்ன தெரியுமா... 'கனமழை பெய்ததால், அளவுக்கு அதிகமாக வெள்ளம் வந்து விட்டது. அதுதான் பாலம் அடித்து செல்லப்பட்டு விட்டது' என்றனர். வெள்ளத்தோடு கரைந்து போனது அவர்கள்பணமா, அக்கறைப்பட... பொதுமக்களின் வரிப் பணம் தானே!சாத்தனுார் அணையில்இருந்து ஒரே நேரத்தில், 1 லட்சத்து, 75,000 கன அடி தண்ணீரை திறந்து விட்டு, 'அப்படி திறக்கவில்லை என்றால் அணையேஉடைந்து விடும்' என்று காரணம் கூறுகின்றனர்.எந்த நவீன தொழில் நுட்பமும் இல்லாத காலத்தில்,வினாடிக்கு 2 லட்சம்கனஅடி நீர் பாய்ந்தாலும், உடையாத அணையை கட்டிய அந்த கால தொழில்நுட்பம் எங்கே... திராவிட மாடல் ஆட்சியாளர்கள், 16 கோடி ரூபாய் செலவில் கட்டிய பாலம், மூன்று மாதத்தில் வெள்ளத்தோடு போன விஞ்ஞானம் எங்கே...ஒரு பாலத்தையே ஒழுங்காக கட்ட முடியாத இவர்கள், எந்த லட்சணத்தில்அணைகளையும், தடுப்பணைகளையும் கட்டுவர்?தமிழகத்தில் ஒன்பதுஆண்டுகள் பொற்கால ஆட்சி செய்த காமராஜர்,நீர்நிலைகளை எப்படி பாதுகாத்தார், புதிய அணைகள் மற்றும் பாலங்களை எப்படி கட்டினார் என்ற பாடத்தை, அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் நீர்வளத்துறை அமைச்சரே!நிதிஷ் குமாரின் பார்முலா!ந.தேவதாஸ், சென்னையில்இருந்து எழுதுகிறார்: அரசியல்சதுரங்கத்தில் காய் நகர்த்துவதில், சந்திரபாபு நாயுடு மிகவும் சாமர்த்தியசாலி என்றால், பீஹார் முதல்வர்நிதிஷ் குமார் உள்ளே - வெளியே ஆட்டத்தில் பயங்கர கில்லாடி!எந்த நேரத்திலும், யார் பக்கமும் சாய தயங்க மாட்டார். அவரை பொறுத்தவரை அறுவடை அமோகமாகஇருக்க வேண்டும். அவ்வளவுதான்!இவர்கள் இருவரையும் சமாளித்து, ஆட்சி நடத்துவது சுழன்றடிக்கும் புயல்மழைக்கு நடுவே, எரியும்குத்து விளக்கை அணையாமல் கொண்டு செல்வதுபோன்ற மிகக் கடுமையானபணியாகும்; பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் சாமர்த்தியம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்!கடந்த ஆட்சிகளின்போது, முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில்மோடி அரசுக்கு எந்த தடங்கலும் இருந்ததில்லை;ஆனால், தற்போது இருவரின் ஒப்புதலும் இல்லாமல், எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. இரு மாநிலத்திற்கும் சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு, அம்மாநில அரசின் கோரிக்கைகளை முந்தைய, பா.ஜ., அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், தற்போது அவ்விஷயத்தில் எந்த நேரத்தில் இருவரும் நெருக்கடி கொடுப்பர் என்பது புரியாத புதிர். இந்நிலையில், சமீபத்தில்,நிதிஷ் குமார் வயது வித்தியாசம் பார்க்காமல், திடீர் திடீரென கால்களில் விழுந்து வணங்கும் ஆட்டத்தை துவக்கிஉள்ளார். மோடியின் கால்களிலும் விழுந்துள்ளார்.இவ்விளையாட்டை பிரதமர் மோடி மிகக் கவனமாகக் கையாள வேண்டும். இரு மாநில முதல்வர்களுமே, பா.ஜ., அரசின் காலைச் சுற்றிய பாம்புகள்.இன்றுவரை மத்தியில் கூட்டணி ஆட்சி என்ற தேர் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இன்னும் மூன்று ஆண்டுகள், அந்த தேரை, பிரதமர் மோடி எவ்வாறு வெற்றிகரமாக நகர்த்திச் செல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

libra sabari
டிச 15, 2024 21:56

இவரு ஏற்கனவே வெளியிட்ட குற்றச்சாட்டு களில் திமுக வின் எத்தனை அமைச்சர்கள் தற்போது சிறையில் உள்ளனர்.அண்ணாமலை முதலில் ராபேல் வாட்சு ரசீதை காட்டட்டும்.காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் இதே ED,IT,CBI, எல்லாம் மாறும்


Vasudeva
டிச 15, 2024 19:57

இந்த நாட்டில் நடக்கும் அனைத்து ஊழலுக்கும் காரணம் மக்களும் ஊழலுக்கு துணை போவதுதான்,ஓட்டுக்கு விலை பேசுபவன் ஒரு பக்கம்,ஓட்டு போடுவதை தவிர்ப்பவன் மறுபக்கம்,இந்த இரு வர்க்க வாக்காளர்கள்தான் முடி முதல் அடி வரை ஊழல் தலைவிரித்தாட வைக்கும் சூத்திரதாரிகள்


வைகுண்டேஸ்வரன்
டிச 14, 2024 22:36

அஜித் பவாரின் 1000 கோடி சொத்துக்குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்ய வைத்து, முடக்கியசொத்துக்களை விடுவித்து தேரை ஜி எப்படி செலுத்தறார் னு தெரியறது. இன்னும் சந்திராபாபு நாயுடு மீது இருக்கும் வழக்குகளையும் இதே மாதிரி காலி பண்ணி தேர் ஓட்டிடுவார். இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு கீழே போயிண்டிருக்கு தெரியுமில்ல


M Ramachandran
டிச 14, 2024 19:31

அரசு அணையயை கட்ட ஒதுக்கும் பணத்தில் 45% கம்மிஷின் ஊழல் காண்டிராக்டர் பங்க்கு கொடுக்கும் நிலையய் அவர்கள் அந்தா பணணத்தை சரி கட்ட தரமற்ற பொருல்கள் மூலம் காட்டுவதால் எப்படி மழை காலங்கள் வரும் வெள்ள நிறை தாங்கு நிலையில் இல்லை.


Gnanam
டிச 14, 2024 18:35

எதிர்ப்பு காட்டினால் கவனிப்பு கிடைக்கும்...செட்டில் ஆகலாம்...இதுவே பின்னால் உள்ள அரசியல்.


RAMAKRISHNAN NATESAN
டிச 14, 2024 14:35

ரகசிய கூட்டணி ஏற்கனவே இல்லை என்றால், அண்ணாமலை ஒருவேளை திமுகவை கூட்டணிக்காக மசிய வைக்கும் பொறுப்பை ஏற்றிருக்கலாம் ......


Anantharaman Srinivasan
டிச 14, 2024 14:26

சுதாங்கன அண்ணாமலையை மூணாவது பைல் போட வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறார். உட்கார்ந்து சிரமப்பட்டு எழுதி piles வந்துட போகிறது. உங்கள் File கவர்னரிடம் போனாலும் ஆட்சிக்கு ஒன்று ஆகப்போவதில்லை என்ற ஆதங்கம்.


Anantharaman Srinivasan
டிச 14, 2024 14:19

நீதிமன்ற சட்டங்கள் அனைத்தும்,சாமானிய மக்களை ஆண்டுகணக்கில் அலையவிடுகின்றன. 30 ஆண்டுகள் ஆனாலும் பல வழக்குகளில் முடிவு எட்டப்படாமலே இருக்கின்றன. மக்களுக்கு எதிராகவும், அரசியல்வாதிகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் நீதிபதிகளும் உள்ளனர். பிரிவாதியிடம் பணம் வாங்கிக்கொண்டு வாதிக்கு ஏதிராக மாறும் வக்கீல்களும் உண்டு. மொத்தத்தில் சட்டம் ஏட்டளவில் தான். Luck இருந்தால் நீதி கிடைக்கும்.


SRITHAR MADHAVAN
டிச 14, 2024 12:42

தமிழக மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கும் வரை நிலைமை மாறாது. "ஆயிரத்தில் பணம் செலுத்தி கோடிகளில் எடு" அரசியல் கட்சிகளின் கொள்கை.


SRITHAR MADHAVAN
டிச 14, 2024 12:38

தயவு செய்து திராவிட அரசை விட்டு விடுங்கள். அவர்கள் தங்கள் தலைமுறையின் கடைசி காலம் வரை மாற மாட்டார்கள். உங்கள் ஆற்றல் மட்டுமே வீணாகிவிடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை