உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / ராகுல் தன் ஆயுள் முழுதும் ஆட்சியில் அமர முடியாது!

ராகுல் தன் ஆயுள் முழுதும் ஆட்சியில் அமர முடியாது!

ஆட்சியில் அமர முடியாது!

எஸ்.ஸ்ரீனிவாசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பீஹாரில் வாக்காளர் சிறப்பு திருத்தச் சட்டம் வாயிலாக, 50 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களை நீக்கியது, தேர்தல் ஆணையம். அதாவது, ஒருவருக்கே பல ஓட்டுகள் இருப்பதையும், இறந்து போனவர்களின் பெயர்களையும், அண்டை நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக வந்து தங்கிஉள்ளோரின் ஓட்டுகளையும் நீக்கியது. இதற்கு, பார்லிமென்ட் எதிர்க்கட்சி தலைவர் ராகுலும், அவரது, 'இண்டியா' கூட்டணியினரும், 'திட்டமிட்டே தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சியினரின் ஓட்டு களை நீக்குகிறது' என்று எதிர்ப்பு குரல் எழுப்பினர். போலிகள் எப்படி எதிர்க்கட்சி வாக்காளர்கள் ஆயினர் என்பதற்கு பதில் இல்லை! இதனிடையே, 'தேர்தல் ஆணையத்திற்கு எதிராக, தான் ஒரு பெரிய வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அதை வெளியிட்டால் தேர்தல் ஆணையமே ஆடிவிடும்' என்றும் ஒரு புரளியை கிளப்பிக் கொண்டிருந்தார், ராகுல். இந்நிலையில், திடீரென, பத்திரிகையாளர்களை கூட்டி, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். முக்கியமாக, ஒருவர் பெயரிலேயே நான்கைந்து ஓட்டுகள் இருப்பது, ஒரே குடும்பத்தில், 80, 85 பேர்களுக்கு ஓட்டுகள் இருப்பது, இறந்து போனவர்களின் பெயரில் ஓட்டு இருப்பது, சரியான புகைப்படங்கள் இல்லாமல் இருப்பது போன்ற குற்றச்சாட்டுகளை கூறி, 'இவையெல்லாம் தேர்தல் ஆணையம் பா.ஜ.,விற்கு சாதகமாக செயல்படுவதை காட்டுகிறது' என்றார். ராகுல் கூறிய குற்றச்சாட்டுகளை நீக்குவதற்காக தானே, வாக்காளர் சிறப்பு திருத்தச் சட்டத்தையே நடைமுறைப்படுத்துகிறது தேர்தல் ஆணையம். பின், ஏன் அதற்கு ராகுலும், எதிர்க்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்? தேர்தல் ஆணையம் பா.ஜ.,விற்கு ஆதரவாக செயல்படுகிறது என்பது உண்மையானால், சத்திய பிரமாணத்தில் கையெழுத்திட்டு, தேர்தல் ஆணையத் திடம் முறையாக தாக்கல் செய்ய வேண்டியது தானே? ஏன் அதை செய்ய ராகுல் தயங்குகிறார்? காரணம், அவர் கூறியது பொய் என்று நிரூபிக்கப் பட்டால், அவர் மீது வழக்கு தொடுப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு உரிமை உள்ளது. அதனால் தான், பத்திரி கையாளர் கூட்டத்தில் அனைத்தையும் சொல்லி விட்டதால், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று பின்வாங்கு கிறார், ராகுல். மீண்டும் ஒருமுறை தேர்தல் கமிஷனிடம் மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை வந்துவிடக் கூடாது அல்லவா? தோல்விக்கான உண்மையான காரணத்தை ஆராயாமல், இப்படி அடுத்தவர் மீது குற்றம் சுமத்தி கொண்டே இருந்தால், ராகுல் தன் ஆயுள் முழுதும் குற்றம் சொல்லிக் கொண்டே தான் இருக்க வேண்டும்; ஆட்சியில் அமர முடியாது! ****

உன் சித்தாந்தப்படி நீ யார்?

பூ.பாலசங்கர், திருநெல்வேலியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சத்தீஸ்கர் மாநிலத்தில், கேரள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கத்தோலிக்க துறவியினர் பேர வை சார்பில், சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், கும்பகோணம் மாநகர தி.க., செயலர் ரமேஷ் பேசுகையில், ' ஹிந்து மதத்தில் பல்வேறு ஜாதிகள் உள்ளன. மதத்துக்குள்ளேயே ஏற்ற தாழ்வு கள் உள்ள நிலையில், அம்மதத்தில் இருப்பதை விட, மதம் மாறி கிறிஸ்துவராகவே அல்லது முஸ்லிமாகவோ இருக்கலாம். 'இன்னும் சொல்லப் போனால், ஹிந்து மதத்தில் வேசி மகனாக இருப்பதை விட, சுயமரியாதை உள்ள மனிதனாக, வேறு மதத்தில் இருக்கலாம்' என, தன் ரிஷி மூலத்தை மறந்து, ஹிந்துக்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். சிறுபான்மையினரை மகிழ்ச்சிப்படுத்த அவ்வாறு பேசியிருந்தாலும், பிறப்பால் அவர் ஹிந்து தானே? அவரைப் பெற்றெடுத்த பெண்ணும் ஒரு ஹிந்து பெண்மணி தானே... ராமர் மற்றும் ஈஸ்வரனின் நாமமான, 'ரமேஸ்' என்பதை, தன் பெயராக கொண்டு, வேற்று மதத்தில் இருப்பது வெட்கமாக இல்லையா? ஹிந்து மதம் பிடிக்கவில்லை என்றால், சுட்டலின், சுடாலின், வெந்தலின், வேகாதலின் என்று வேறு ஏதாவது பெயரை சூட்டிக் கொள்ள வேண்டியது தானே... எதற்கு ஹிந்து பெயருக்குள் ஒளிந்து கொண்டு திருட்டு வேலை செய்ய வேண்டும்? ஹிந்துக்களை இழிவுபடுத்துவது போன்று பேசியது மட்டுமின்றி, கட்டாய மதமாற்றத்திற்கு துாண்டும் வகையிலும், மத மோதல்களை உருவாக்கும் வகையிலும் பேசிய இவரைப் போன்ற வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹிந்து விரோத ஆட்சியாளர்கள் இதை செய்ய மாட்டார்கள்; ஆனால், நீதிமன்றத்தால் செய்ய முடியும் தானே... ஹிந்து அமைப்புகள் சா ட்டையை சுழற்ற வேண்டும்! ***

காரணம் என்ன?

எஸ்.ரேவதி பாலு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்து, நடிப்பில் உயர்ந்து, 'உலக நாயகன்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசன், தற்போது, ராஜ்யசபா எம்.பி., ஆகிவிட்டார்.'தினமலர்' நாளிதழில், 'எம்.பி.,க்களின் ஹீரோ!' என்ற தலைப்பில், அவர் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. பார்லிமென்டில் சதா சர்வகாலமும் பிற மாநில எம்.பி.,க்கள் அவரை மொய்க்கின்றனராம். அவர் பின்னாலேயே ஒரு கூட்டம் அலைகிறதாம். இதெல்லாம் அவர் நடிகர் என்பதால் ஏற்பட்ட கவர்ச்சியால் அல்ல!சரளமாக ஹிந்தி பேசுவதால், வட மாநில எம்.பி.,க்கள் அவரி டம் சகஜமாக பேசிப் பழகுகின்றனர். அதே போல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா எம்.பி.,க்களிடமும் அவரவர் மொழியில் பேசி அசத்துகின்றாராம்.இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஜம்மு - -காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, கமலின் ஹிந்தி புலமையைக் கண்டு ஆச்சரியப்பட்டு, 'பஹல்காம் தாக்குதலுக்குப் பின், சுற்றுலா பயணியர் வருகை குறைந்துள்ளது.அதனால், தென் மாநில ஹீரோயின் ஒருவரை எங்கள் மாநில துாதுவராக நியமிக்க ஆசைப்படுகிறோம். அவர் வாயிலாக மீண்டும் சுற்றுலா அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்று கூறி, ஒரு கதாநாயகியை சிபாரிசு செய்யுமாறு கேட்டுக் கொண்டாராம்!இத்தனை பெருமைகள் கமலுக்கு கிடைக்க காரணம், அவருடைய பன்மொழித் திறமையல்லவா? ஆனால், அவர் அளிக்கும் பேட்டிகளில், 'தமிழக அரசின் இருமொழி கொள்கையே மாணவ சமுதாயத்திற்கு நல்லது' என்று சொல்வதை எப்படி ஏற்பது?நாட்டுக்கு இருமொழி கொள்கை ஏற்புடையதல்ல என்பதை, தன் வாழ்வின் வாயிலாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கும் கமல், மாணவர்கள் பல மொழிகளை கற்றுக்கொள்ள ஊக்குவிப்பதற்கு பதில், இருமொழி கொள்கையை ஆதரிக்க காரணம் என்ன?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
ஆக 13, 2025 19:34

கட்டிய வேடம் அப்படி. நாய் வேஷம் போட்டால் குரைக்கணும். குரங்கு வேஷம் போட்டால் தாவணும்.


D.Ambujavalli
ஆக 13, 2025 17:09

அவர் ஒட்டிக்கொண்டு, ரா. ச . எம் பி யம் ஆகக் காரணமான கட்சிக்கு எதிராக- பேசலாமா? மாணவர்கள், மக்கள், இருமொழி காற்ரால் என்ன, எந்த மொழியும் கற்காவிட்டால் என்ன, திமுகவைப் பகைத்துக்கொள்ளலாமா ?


அரவழகன்
ஆக 13, 2025 11:07

நடிகர் கமல் இருமொழி கொள்கையை ஆதரிக்க காரணம் அரசியல் பிழைப்பு திராவிட அடிமைத்தனம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை