எஸ்.சந்திரகாந்தன், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, காங்கிரசார் தான் தலையில் சுமந்து, காபந்து பண்ணிக் கொண்டு இருப்பது போலவும், பா.ஜ., அதை காலால் மிதித்து, நசுக்குவது போலவும்,'நம் முன்னோரால் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புசட்டம், நம் தேசத்தின் உயிர் நாடி. அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சிந்தனையையும் பாதுகாக்க, நாம் ஒன்றுபட வேண்டும்' என, ஓர் உருட்டுஉருட்டியிருக்கிறார், காங்.,கின் ஒப்புக்குச்சப்பாணி தலைவர், மல்லிகார்ஜுன கார்கே!இவருக்கு சாவி கொடுத்து, பின்னால் இருந்து ஆட்டுவிக்கும் அக்கட்சியின் ரியல்தலைவரான ராகுல், இந்திய குடியுரிமையோடு,கூடுதலாக, பிரிட்டன் குடியுரிமையும் வைத்துள்ளாராம். கர்நாடகாவை சேர்ந்த வழக்கறிஞர் விக்னேஷ் ஷிஷர், ராகுலின் இந்த இரட்டை குடியுரிமை தில்லாலங்கடி குறித்து, 'ராகுலின்இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்' என்று வழக்கு தொடுத்து, சி.பி.ஐ., விசாரணையும் கேட்டிருந்தார்.இம்மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை, மனுவைரத்து செய்து, குடியுரிமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர, 'ஐடியா' கொடுத்தது. ராகுலின் குடியுரிமையை ரத்து செய்யக்கோரி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்குகோரிக்கை மனு அனுப்பிய விக்னேஷ் ஷிஷர், அம்மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார்.அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, 'விக்னேஷ் ஷிஷர் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டிச.,19ல், மத்திய உள்துறை அமைச்சகம்அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அத்தாரிட்டியே தாங்கள் தான் என்று பெருமை பீற்றிக் கொள்ளும் காங்., கட்சியின் தில்லுமுல்லை பார்த்தீர்களா?இப்போது, ராகுலின் இந்திய குடியுரிமை,உள்துறை அமைச்சகத்தின் காலடியில்!மிஸ்டர் கார்கே அவர்களே... நம் அரசியலமைப்பு சட்டத்தின் எந்த பக்கத்தில்,இரட்டை குடியுரிமை வைத்துள்ள ஒருவர், தேர்தலில் போட்டியிட்டு, பார்லிமென்ட் உறுப்பினராகலாம் என்று போட்டிருக்கிறதுஎன்று விளக்குகிறீர்களா? மக்களே புரிந்து கொள்ளுங்கள்!
ப.ராஜேந்திரன்,
சென்னையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'தனிப்பட்ட
கொலைகளுக்கும், சட்டம் -- ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை என்பதைபழனிசாமி
புரிந்து கொள்ளவேண்டும்...' என, தி.மு.க.,அமைப்புச் செயலர், ஆர்.எஸ்.பாரதி
கூறியுள்ளார். ஓசூரில், வக்கீல் மீதான தாக்குதல், தஞ்சையில்
ஆசிரியை கொலை இரண்டும்தனிப்பட்ட விவகாரங்களின்அடிப்படையில்
நடந்தவை.அதற்கும், சட்டம் - ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை என்று அவர்
கூறியிருப்பது, சிரிப்பை வரவழைக்கிறது. எந்தக் குற்றத்திற்கும்
சட்டப்படி தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.சட்டப்படி குற்றவாளிகள் தண்டனை
அனுபவிக்க வேண்டும் என்பதுதான் நியதி. அப்படியிருக்கையில் ஓர் ஆசிரியை,
பட்டப்பகலில் பள்ளி வளாகத்துக்குள்ளேயே கொலை செய்யப்பட்டது எப்படி சமூகத்தை
பாதிக்காமல் இருக்கும்? ஏதோ விபத்து தொடர்பான மரணம் என்றால்,
அச்செய்தியை படிப்பவர்கள், அனுதாபத்துடன் அடுத்த செய்திக்கு போய்விடுவர்.
ஆனால், பள்ளி வளாகத்துக்குள்ளேயே இப்படி ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது
என்றால்,இச்சமூகம் சீர்கெட்ட பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என்பதைத்தான்
குறிக்கிறது. தன் தாய்க்கு சரியாக மருத்துவம் செய்யவில்லைஎன்று
சென்னையில், ஒருடாக்டர் கத்தியால் குத்தப்பட்டு, உயிர் பிழைத்துஉள்ளார்.
அதுவும் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கவில்லையா அல்லது அப்போது, எல்லா
டாக்டர்களும் போராட்டக்குரல் எழுப்பியதால், தி.மு.க., இது குறித்து
பேசவில்லையா?ஓர் ஆசிரியைக்கு பள்ளிக்குள் எந்தப் பாதுகாப்பும்
இல்லை என்று, ஆசிரியர்கள் சம்பவம் நடந்த அன்றே போராட்டத்தில்
குதித்துஇருந்தால், இந்த அரசு இவ்வளவு மெத்தனமாக பேசாது.ஆசிரியை
கொல்லப்பட்டதைப் பார்த்த மாணவர்களும், மற்ற ஆசிரியர்களும் தங்கள்
பயத்திலிருந்து மீண்டுவர வேண்டும் என்றுதானே, அந்தப் பள்ளிக்கு ஒரு வாரம்
விடுமுறை அளிக்கப்பட்டது?சட்டம் - ஒழுங்குக்கும்,அரசியல்வாதிகளுக்கும் தான் சம்பந்தமில்லை. இதைமக்கள் புரிந்துகொண்டால்சரி! அரசுக்கு தோன்றாதது ஏன்?
ரேவதி
பாலு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மாணவியரிடம்
அத்து மீறினால், ஆசிரியர் வேலை காலி!' என்று, தனியார் பள்ளிகள் இயக்குநர்
பழனிசாமி, சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார். அதை, நாளிதழில் படித்தவுடன்
மகிழ்ச்சி ஏற்பட்டாலும், அரசுப் பள்ளி மாணவியர் என்ன பாவம் செய்தனர்...
அவர்கள் காப்பாற்றப்பட வேண்டாமா என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது. தங்களின்
அதீத மரியாதைக்குரிய ஆசிரியர்களாலேயே, பாலியல் சீண்டலுக்கு ஆட்பட்டு,
அவமானப்படுவதும், விஷயம் தெரிந்து, அவர்கள் குடும்பமே மனம்குன்றிப்போவதும்
இன்னும்எத்தனை நாளைக்கு தொடரும்? பெற்றோர்களாகிய நாங்கள், ஒவ்வொரு
நாளும், நம் குழந்தையை எப்படிப்பட்ட நபரிடம் ஒப்படைத்திருக்கிறோம் என்று,
நம்பிக்கைக்கும்,அவநம்பிக்கைக்கும் இடையில் உழன்று கொண்டிருக்கிறோம். மாதா,
பிதா, குரு, தெய்வம் என தெய்வத்திற்கு முன், ஆசிரியர்களை வைத்து போற்றும்
நிலையில், அத்தகைய மனிதர்களாலேயே, நம் குழந்தைகளின் வாழ்வு பாழாகும்
என்றால், யாரைத் தான் நம்புவது? மாணவர்களை சமுதாயத்தின் அழகிய
சிற்பமாகசெதுக்க வேண்டிய ஆசிரியர்களே, அவர்கள் வாழ்வுக்கு, கரும்புள்ளியாக
மாறிப்போகும் அவலம் தொடர்ந்தால், இந்த சமுதாயம் என்ன ஆகும்? ஆசிரியர்கள் என்ற பெயரில் நடமாடும் இத்தகைய சமுதாய புல்லுருவிகளுக்கு, எப்படி என்ன பெரிதாக தண்டனை கிடைத்து விடுகிறது?பிடிபடும்
ஆசிரியர்கள்,போக்சோ சட்டத்தில்உடனே தண்டனை பெற்றுவிடுகின்றனரா? அதிலும்,
சிலர் விடுதலையாகி, திரும்பஅதே பள்ளியில் ஆசிரியராகதொடர்வதை
பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்! 'இத்தகைய
கீழ்த்தரமானவர்களுக்கு சீட்டைக்கிழித்து, வீட்டுக்கு அனுப்பாமல், ஏன்
விசாரணை, விடுதலை என்கின்றனர்' என, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்
மனம் குமுறத் தானே செய்கிறது? அந்த வகையில் சிறு ஆறுதலாக தனியார்
பள்ளிகளாவது, 'மாணவியரிடம் அத்து மீறினால் வேலை காலி!' என்று துணிந்து
முடிவெடுத்துள் ளது. அரசுப்பள்ளிகளில் இந்த நல்ல முடிவை எப்போது எடுக்கப்
போகின்றனர்?