உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / பூக்கும் தாமரையையும் அதிகாரிகள் அகற்றணுமா?

பூக்கும் தாமரையையும் அதிகாரிகள் அகற்றணுமா?

ஆர்.முருகன், ராயபுரம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான,சி.எம்.டி.ஏ., சார்பில், சென்னை அருகே, போரூர் செட்டியார் அகரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பசுமைப்பூங்காவை ஆய்வு செய்ய, சமீபத்தில் வந்திருந்தார் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு.ஆய்வின்போது, அருகில் நின்றிருந்த அதிகாரிகளிடம், 'குளத்தில்கூட தாமரை மலரக்கூடாது' என உத்தரவிட்டிருக்கிறார். அன்று முதல், அதிகாரிகளின் அன்றாடப் பணிகளில் ஒன்றாக, குளங்களில் மலரும்தாமரையையும் பிடுங்கிக் கடாசுதல் என்றாகி விட்டது.அண்ணன் சேகர்பாபுவின் அறிவாற்றலைக்கண்டு, நகைப்பதா, பரிகசிப்பதா என்று ஒரு புண்ணாக்கும் புரியவில்லை.தாமரை என்பது, நம் நாட்டின் தேசிய மலர். அது பா.ஜ.,வின் சின்னம் என்பதாலேயே, தி.மு.க.,வுக்கு கிலி ஏற்பட்டுவிட்டது என்றால், அதற்கு அந்த குளங்கள் பொறுப்பா, தாமரைச்செடி பொறுப்பா, பூக்கும் தாமரைதான் பொறுப்பா? ஆறுகளிலோ, கடலிலோ தாமரைச்செடியேவளராது. குளங்கள்தான் அதன் வசிப்பிடம்.அந்த குளங்களே இல்லாமல் செய்து விட்டால்?இப்படி ஆழமாக, அறிவுப்பூர்வமாக சிந்தித்ததில் உதித்ததுதான், ஹிந்து கோவில்களை தகர்ப்பதும், கோவில் அருகிலுள்ள குளங்களை துார்ப்பதும்.ஆட்சிக்கு வந்த மூன்றாண்டுகளில், ஆயிரக்கணக்கான ஹிந்து கோவில்களை இடித்து தரைமட்டமாக்கியதும், கோவில்களிலுள்ள குளங்களை துார்த்து கடைகளையும், கல்யாண மண்டபங்களையும் கட்டிக் கொண்டிருப்பது, இந்த, 'பரந்த' நோக்கில்தான்.ஹிந்து கோவில்களை ஒட்டித்தான் குளங்கள் இருக்கும். அந்த குளங்களில்தான் தாமரை மலர் பூத்துக் குலுங்கும். சர்ச்சுகளுக்கு அருகிலோ, மசூதிகளுக்கு பக்கத்திலோ, குளங்கள் எதுவும் இருக்காது.அதனால்தான், கோவில்களை இடித்து தரைமட்டமாக்கி, அதன் அருகிலுள்ள குளங்களையும் துார்த்தெடுத்து வருகிறார்இந்த மஹானுபாவர். இதற்கான தண்டனை...வெயிட்... வருகிறது 2026!

திராவிடம் சிறக்க புதிய வழி இது!

முனைவர் ப.நாகலிங்கம் பிள்ளை, தாழக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மக்களை நேரடியாகஎதிர்கொள்ள, அரசியலில்குதித்துள்ளார் நடிகர் விஜய்.கட்சி மாநாட்டில் தன் கொள்கைகளை அறிவித்ததோடு, பல தீர்மானங்களையும் அறிவித்திருக்கிறார்.திராவிடமும், தமிழ் தேசியமும் தன் கட்சியின் இரு கண்கள் என்று அறிவித்து, தன்னுடையதுபுதிய அரசியல் நிலைப்பாடு என்பதாகக் காட்டி இருக்கிறார்; இருக்கட்டும்.'மத்திய அரசின், மூன்றாவது மொழிக் கொள்கை திணிப்புக் கனவை, நிறைவேற்ற விடப்போவதில்லை'எனவும் சூளுரைத்துள்ளார்.மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை குறிப்பிடும் மூன்றாவதுமொழி, ஆங்கிலம் என்பது வேறு விஷயம்.திராவிடம் என்ற அடையாளத்துடனும், இருமொழிக் கொள்கை என்ற கோஷத்துடனும் அரசியல் நடத்தும் மாநிலக்கட்சிகளுடன், விஜயும்சேர்ந்து விட்டார். திராவிடம் மற்றும் இருமொழிக் கொள்கைஅரசியல் குறித்த, தெளிவாகாத சில சந்தேகங்களைக் கேட்பதும், சில தகவல்களை எடுத்துக்கூறுவதும் தான் இக்கடிதத்தின் நோக்கம்.தமிழர்களாகிய நம்மைப்போன்று, பிற தென்மாநிலங்கள் திராவிடத்தை கொண்டாடுகிறதா என்பதை சிந்தித்தீர்களா விஜய்?பூகோள அடையாளம், மொழி தொடர்பு, பண்பாட்டு ஒட்டுதலில் திராவிடத்தை ஏற்று, ஏதாவது ஒரு தென் மாநிலம் அரசியல் நடத்துகிறதா? அது போகட்டும்!இப்போது, அவற்றையும்திராவிட அடையாளத்துக்குள் அகப்படுத்தும் அரசியல் நடத்த, ஒரு அருமையான சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. அதுவும் மும்மொழிக் கொள்கையைஆயுதமாகக் கொண்டே, திராவிட பிராண்டை தென் மாநிலங்களில் பிரபலப்படுத்தலாம்; நீங்கள் தயாரா?'என்னது... மும்மொழிக்கொள்கையா?' என்று பதறாதீர்கள்!மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய கல்விக்கொள்கை கூறும் மூன்றாவது மொழி, ஹிந்தி தான் என்பது அல்ல; வட்டார மொழிகளுள் ஏதேனும் ஒன்றை கற்கலாம். புதிய தேசிய கல்விக் கொள்கையின் பிரிவு 4 - 2ல் பாருங்கள், புரியும்!வட்டார மொழிகள் பட்டியலில், தென் திராவிட மொழிகளான, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடமும் இடம் பெற்றுள்ளன. புரிகிறதா?தமிழ் பிள்ளைகளை, பிற திராவிட மொழிகளுள்ஒன்றை அவர்களது விருப்பப்படி படிக்க வைத்து விட்டால், அனைத்து தென் மாநிலங்களையும் உள்ளடக்கி,திராவிட அடையாளத்தைஎளிதாக பரப்பி விடலாமே!திராவிடத்தை போற்றுவதற்கு இதைவிட எளிய வழி கிடைக்குமா விஜய்? திராவிடத்தை தமிழுடன் இணைத்து, தமிழ் தேசியத்தையும் காண முடியுமே! முயற்சி செய்து பாருங்களேன்!

-கலகக் குரல் அல்ல; உரிமைக்குரல்!

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: தங்கள் கொள்கைப்படி, நாட்டின் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் பாடுபடுவது தானே கட்சி துவங்குவதன் அடிப்படை நோக்கம்? பெரும்பான்மை பெற முடியாத பட்சத்தில், ஒருமித்த கொள்கைகள் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து, ஆட்சி அமைக்கலாம்.திராவிட கட்சிகள், குறிப்பாக தி.மு.க., மட்டும்மத்தியில் பா.ஜ., - காங்., என எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும், மத்திய அரசில் வளமான அமைச்சர் பதவிகளை போராடி வாங்கி கொள்வதுவழக்கம். ஆனால், தமிழகத்தில் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டும், கூட்டணி கட்சிகள் வெளியில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டு மாம். கேட்டால், 'மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி' என்ற வியாக்கியானம் வேறு பேசுவர்.ஆயினும், தி.மு.க.,வின்,'எக்ஸ்ட்ரா லக்கேஜ்' போல,தொங்கு சதையாக, ஒன்றிரண்டு எம்.பி., - எம்.எல்.ஏ., சீட்டுக்காக, அடிமைகளாக காலம் கடத்துவது அவமானம்அல்லவா! இதை உணர்ந்து,ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று வாய் திறந்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்திருமாவளவன்.இது, கலகக் குரல் அல்ல; உரிமைக் குரல்! மது ஒழிப்பு மாநாட்டில்பம்மி, மது ஆலைகள், மதுக்கடைகள் நடத்துவோரையே மேடையேற்றி அசிங்கப்பட்டது போல் அல்லாமல், மிரட்டல்களுக்கு பயப்படாமல், சட்டமேதை அம்பேத்கர் பற்றி ஆதவ் அர்ஜுனா எழுதியுள்ள புத்தகம் வெளியீட்டு விழாநடைபெறும் டிச., 6 கூட்டத்தில், அதிகாரத்தில் பங்கு என்று ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்த விஜயுடன், திருமாவளவன்பங்கேற்பாரா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

KRISHNAN R
நவ 27, 2024 07:47

இயற்கை ஆர்வலர் பட்டம் தரலாம்


Babu
நவ 12, 2024 13:19

சூப்பர்


Sampath Kumar
நவ 11, 2024 14:51

சூரியனை பார்த்து நாய் குழைத்த கதைக்க உள்ளது இங்கு பதிவிட்டவர்களின் கருத்துக்கள் அவர் சோனா து ஆகாய தாமரை செடியை அது நீர்நிலைகளின் வலுரம் செடி அதுனால் நீர் வேகமாக உரிச்சப்பட்டு ஆவியாக்கப்படும் இதனால் நீர் நிலை வற்றி விடும் அதற்காக சொன்னாரு


M S RAGHUNATHAN
நவ 11, 2024 11:24

இனி மதுரையில் உள்ள பொற்றாமரை குளத்தை பீபீ குளம் என்று ஷேக் பாபு பெயர் மாற்றம் செய்வாரா? மதுரை மக்களே உஷார். தமிழ் பாடல்களில் தாமரை என்ற வார்த்தை வந்தால் அதை நீக்கி பாட வேண்டும் என்று சங்கீத வித்வான்கள், பாடலாசிரியர்கள் ஆகியோருக்கு ஆணை பிறப்பிக்கப் படுமா? தாமரை பூத்த தடாகமடி, வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள், ஆயிரம் தாமரை மொட்டுக்களே, ஆகாய தாமரை போன்ற பாடல்கள் இனி பாடக் கூடாது என்று தடை வரும். தாமரை நெஞ்சம் என்ற திரைப் படத்துற்கு தடை விதிக்கப் படுகிறது.


M S RAGHUNATHAN
நவ 11, 2024 11:17

திரு ஷேக் பாபு திரு ஸ்டாலினிடம் அவர் மகள் பெயரை மாற்றச் சொல்வாரா? செந்"தாமரை" என்பதை இனி செரை என்று கூப்பிட வேண்டும் என்று ஆலோசனை சொல்வாரா ? பைத்தியக்காரத்தனதிற்கு எல்லையே இல்லை. தாமரை இந்தியாவின் தேசிய மலர். அதை அவமானப் படுத்துவது குற்றம். ஸ்டாலின் அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி தமிழகத்தில் பிறக்கும் எந்த குழந்தைக்கும், தாமரை, தாமரை செல்வன், தாமரை செல்வி, செந்தாமரை, தாமரைக் கண்ணன், தாமரை மணாளன் என்று பெயர் வைக்க கூடாது என்று அரசாணை போடுவாரா? கோயில்களில் பக்தர்கள் தாமரைப் பூ கொண்டுவந்தால் அதை கோயிலுக்குள் கொண்டு வரக் கூடாது என்று HRCE ஆணை பிறப்பிக்குமா? செந்தாமரை என்ற ஒரு நடிகர் தமிழ் சினிமாவில் இருந்தார். ஒரு வேளை ஏதோ ஒரு " காரணத்திற்காக" அந்தப் பெயரை ஸ்டாலின் மற்றும் ஷேக் பாபு மறைக்க பார்க்கிறார்களா ? ஒரு வேளை குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு எதிராக விடப்பட்ட அம்பா இது ?


sankaranarayanan
நவ 11, 2024 09:18

அறநிலையத்துறை அமைச்சர் குளத்தில்கூட தாமரை மலரக்கூடாது என உத்தரவிட்டிருக்கிறார். கோயில் குளம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற வசனம் இவருக்குத்தெரியாதா அந்த கோயில் குளங்களில் மலரும் தாமரை பூக்கள் இருக்க வேண்டும் என்பது சொல்லாமலே எல்லாருக்கும் தெரியும் அவைகள் அந்த கோயிலில் உள்ள எல்லா தெய்வங்களுக்கும் பூஜை செய்ய பயன்பட்டுவரும் என்பது அவருக்கு நன்கே தெரியும் அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள் அது போன்று இவருக்கு தாமரையை கண்டாலே இந்த பயம் ஏன்? மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தினானாம் அதுபோன்று இவர்நாளைக்கு தாமரை மலர்வதை கண்டு குளத்தையே மூடச்சொன்னாலும் சொல்வார் அல்லது அந்த தாமரை மலரும் குளம் உள்ள கோயிலை மூடச்சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு ஒன்றுமே இல்லை இதுதான் இந்த அரசின் அறநிலையத்துறையின் கோட்பாடு


sankar
நவ 11, 2024 09:15

அரசியலில் கோமாளிகளுக்கு பஞ்சம் இல்லை - பத்து ரூபாய் நண்பர்போல இவர் நாளை கட்சி மாறினால் - சூரியனை மறைக்கச்சொல்வார் போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை