சோனியாவா, சோபியாவா?
ஜெ.கோபாலசுவாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் மருமகளும், முன்னாள் பிரதமர் ராஜிவின் மனைவியுமான, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, அண்மையில் வெளியிட்டுள்ள தன் சுயசரிதை நுாலில், 1992 டிச., 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட காட்சியை தொலைக்காட்சியில் பார்த்து, கண்ணீர் விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அன்று, நம் நாட்டில் தனியார் செய்தி தொலைக்காட்சிகள் இல்லாத சூழலில், அரசு ஊடகமான துார்தர்ஷனில் கூட, அக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பப்படவில்லை. அப்படியிருக்க, இவர் எந்த தொலைக்காட்சியை பார்த்து கண்ணீர் விட்டார் என்பதையும் குறிப்பிட்டு இருக்கலாம்! மேலும், அவருடைய இந்த, 'தேர்ந்தெடுக்கப்பட்ட கண்ணீர்' பல வரலாற்றுக் கேள்விகளையும் எழுப்புகிறது. கடந்த 1984ல் முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டில்லியில் மட்டும் அதிகாரப்பூர்வக் கணக்குப்படி, 2,733-க்கும் மேற்பட்ட அப்பாவிச் சீக்கியர்கள் பட்டப்பகலில் கொடூரமாகக் கொல்லப்பட்டனரே... அப்போது இவரது கண்களில் கண்ணீர் வரவில்லையா? அதேபோன்று, 2009-ல் ராஜபக்சே அரசோடு கைகோர்த்து, காங்கிரஸ் அரசு வழங்கிய ராணுவ உதவிகளால், முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனரே... அப்போது இந்தத் தாயுள்ளம் ஏன் அழவில்லை? மேலும், 1987 ஹாஷிம்புரா படுகொலைகள், 1989 பாகல்பூர் கலவரம் ஆகியவற்றின்போதும் சோனியாவின் கருணை உள்ளம் கலங்க மறுத்தது ஏன்? காங்கிரஸ் வரலாற்றின் கசப்பான உண்மைகளை மறைத்துவிட்டு, தேர்தல் அரசியலுக்காகவும், ஓட்டு வங்கிக்காகவும், தனக்குச் சாதகமான நிகழ்வுகளுக்கு மட்டும் கண்ணீர் வடிப்பதாக எழுதியிருப்பதன் வாயிலாக, நடிப்புலக ஜாம்பவான் என்று அழைக்கப்பட்ட இத்தாலிய நடிகை சோபியா லோரனையே, நடிப்பில் மிஞ்சி விட்டார், சோனியா! lll