உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / ஊழல்வாதிகளுக்கு கடிவாளம் போட வேண்டும்!

ஊழல்வாதிகளுக்கு கடிவாளம் போட வேண்டும்!

வி.மோகன், நெல்லிக்குப்பம், கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்து மூன்று மாதங்களுக்குள், அவர்களது சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்; பின், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று, 2010ல் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு. தற்போது, அந்த பரிந்துரையை, தமிழக வெற்றிக் கழக அரசு தைரியமாக கையில் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது! அரசியல்வாதிகளுக்கு நிகராக, அரசு அதிகாரிகளும் ஊழல் செய்து சொத்து குவித்து வருகின்றனர். அவர்களுக்கு கடிவாளம் போடுவது காலத்தின் கட்டாயம். இந்த லஞ்சப் பூனைகளுக்கு மணி கட்டுவதுடன் நின்று விடாமல், ஊழல் அரசியல்வாதிகளுக்கும் மணி கட்ட வேண்டும். சாதாரணமாக, சைக்கிளில் சென்ற ஒன்றிய, நகர செயலர்கள் கூட, ஒரு சில ஆண்டுகளில் இன்னோவா காரில் வலம் வருவதும், அவர்களது ஓட்டு வீடுகள், பங்களாக்களாகவும் மாறிவிடுகின்றன. இவர்களே இப்படி என்றால், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் குறித்து கேட்கவே வேண்டாம்... தங்கள் பெயரிலும், பினாமிகள் பெயர்களிலும் சொத்துகளை குவித்து வைத்துள்ளனர். அதனால், இவர்களும் ஆண்டுதோறும் தங்கள் சொத்துக் கணக்கை சமர்ப்பிக்க அரசு உத்தரவிட வேண்டும். தேர்தலின் போது வேட்பாளர்கள் காட்டுவது போன்று பொய் கணக்கு காட்டாமல், உண்மையான கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க வேண்டும். கூடுதலாக சொத்து சேர்த்திருந்தால், அதை பறிமுதல் செய்து அரசு கஜானாவிற்கு கொண்டுவர வேண்டும். அப்போதுதான், ஊழல்வாதிகளுக்கு கையூட்டுப் பெறும் ஆசை சிறிதளவாவது குறையும்! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
அக் 13, 2026 19:02

நான். பணியில். இருந்த. 70. 80. 90. காலங்களிலேயே. ஆண்டுதோறும். Property Details கொடுக்கும். வழக்கம். இருந்தது அந்த. நடைமுறை. ஏன் நிறுத்தப்பட்டது. என்பது. தெரியவில்லை தேர்தல். Affidavit இல் 10000. தான் தனது. கையிருப்பு. என்று. கணக்குக்காட்டிய. முன்னாள். முதல்வரின். அடியொற்றித்தான். அதிகாரிகளின். கணக்குகளும். Irukkum


Lakshminarasimhan
அக் 13, 2026 07:07

த வெ க ஆட்சியில் ஊழலும் நடக்கல மற்றும் லஞ்சம் இலலை என தினமலர் முட்டு கொடுக்குதோ என்கிற டவுட் வருதே ?


முக்கிய வீடியோ